Load Image
dinamalar telegram
Advertisement

-எல்லை பாதுகாப்பு படை வீரர் உடலுக்கு ராணுவ மரியாதை

Tamil News
ADVERTISEMENT
ராஜபாளையம்:யிற்சியின் போது இறந்த ராஜபாளையத்தை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரரின் உடலுக்கு 24 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது.துாத்துக்குடி மாவட்டம் மாதலப்புரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமரன் 41. மனைவி சண்முகலட்சுமி 32, மகன் முகேஷ் 15, மகள் மதுமித்ரா 10. ராஜபாபாளையத்தில் உள்ள மனைவியின் வீட்டில் குடியிருந்து வருகிறார்.2004ல் எல்லை பாதுகாப்புபடையில் சேர்ந்தார்.ஒடிசாவில் உள்ள நக்சல் தடுப்பு பிரிவில் பணியாற்றுவதற்காக பெங்களூரு அடுத்த கடனாளியில் செயல்படும் பயிற்சி மையத்தில் பணியாற்றினார்.நேற்று முன்தினம் அங்கு சேற்றில் சிக்கி உயிரிழந்தார்.செந்தில் குமரன் உடல் நேற்று ராஜபாளையத்தில் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. 24 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. பின் தகனம்செய்யப்பட்டது.செந்தில்குமரன்

செந்தில்குமரன்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement