Load Image
Advertisement

நீண்ட நாள் உறவிது ; இன்று போல என்றும் தொடர்வது : இன்று நண்பர்கள் தினம்

  நீண்ட நாள் உறவிது ; இன்று போல என்றும் தொடர்வது : இன்று நண்பர்கள் தினம்
ADVERTISEMENT
உறவினர்கள் இல்லாமல் கூட இருக்கலாம். நண்பர்கள் இல்லாமல் இருப்பது கடினம். உண்மையான நட்பு என்றுமே அழியாது. நட்புக்கு மதிப்பளிக்கும் விதமாக ஆகஸ்ட் முதல் ஞாயிறு (ஆக., 7) நண்பர்கள் தினமாக இந்தியாவில் கொண்டாடப் படுகிறது. தினமும் சந்திக்கும் நண்பர்களை நினைவுபடுத்த தேவையில்லை எனினும் பள்ளி, கல்லுாரி கால நண்பர்களை நினைவுபடுத்தி, சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது நண்பர்கள் தினம்.


தொடரும் நட்பு : ஒவ்வொரு காலகட்டத்திலும், புதிய, புதிய நண்பர்களின் பழக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்நிலையில் பழைய நண்பர்களை நேரில் சந்திக்க முடியாவிட்டாலும் சமூக வலைதளமான 'வாட்ஸ் ஆப்', 'பேஸ்புக்', அலைபேசி, 'இ--மெயில்' மூலம் நட்பை வளர்த்துக் கொள்ளலாம். தவிர்க்க முடியாத காரணங்களினால் முறிந்து விட்ட நட்பை, திரும்பவும் உயிர்ப்பிக்கும் நாளாகவும் இந்நாள் அமைகிறது. கருத்து வேற்றுமையினால் நண்பர்களுக்குள் பிரிவு வருவது இயற்கைதான். அதை அடுத்த சில மணி நேரங்களில் உணர்ந்து தாமாக பேச முன்வர வேண்டும்.

நட்பை போற்றும் சில பொன்மொழிகள்.



.
*நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு, ஒருபோதும் நண்பனை விட்டுக் கொடுக்காதே.

*உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.

*உன் நண்பர்களை காட்டு... உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.

*ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்.

*நமது நண்பர்கள் தான் நமது உண்மையான சொத்து.

*எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.

*வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, துாக்கி விடுபவன் நண்பன்.

* நண்பர்களுக்குள் மன்னிப்புக்கும், நன்றிக்கும் இடமில்லை.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement