Load Image
dinamalar telegram
Advertisement

பள்ளி, கல்லுாரி செய்திகள்வேலை வாய்ப்பு முகாம்

மதுரை: சவுராஷ்டிரா கல்லுாரி சுயநிதிப் பிரிவு மாணவர்களுக்கு அப்போலோ ஹோம் ஹெல்த் கேர் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். முதல்வர் சரவணன் துவக்கி வைத்தார். வேலைவாய்ப்பு அலுவலர் பேராசிரியர் ஜெயந்தி வரவேற்றார். அப்போலோ மதுரை கிளை தலைவர் சபரிகுமார், மனிதவள மேலாளர்கள் சூரியன், எபிநேசர், மனிதவள நிர்வாகிகள் துரைப்பாண்டி,


ஸ்வேதா ஆகியோர் நேர்காணல் நடத்தினர். நேர்முகத் தேர்வில் 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர். பேராசிரியர்கள் ரவீந்திரன், காஞ்சனா, சின்ன சக்கரவர்த்தி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.கருத்தரங்குமதுரை: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி வணிகவியல் நிறுமச் செயலரியல் துறை சார்பில் கருத்தரங்கு நடந்தது. செயலாளர் விஜயராகவன் தலைமை வகித்தார். முதல்வர் வெங்கடேசன், பேராசிரியர் ராம சுப்பையா, துணை இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். தற்போதைய சூழ்நிலையில் 'பி2பி' ன் தாக்கம் என்ற தலைப்பில் ஆனந்தகுமார் பேசினார்.


பேராசிரியர்கள் சாய் மோகனா, மணிமுத்து, ரமேஷ் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர்.கிடாரிப்பட்டி: லதாமாதவன் கல்லுாரியில் சேர்மன் மாதவன் தலைமையில் இலக்கை நோக்கிய பயணம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. டுவின்டெக் அகாடமி வணிக மேலாண்மை தீர்வு மைய நிர்வாக இயக்குநர் மகாலிங்கம் பேசினார். முதல்வர்கள் முத்துராஜா, வரதவிஜயன், பி.ஆர்.ஓ., பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


மின்னியல் துறை தலைவர் பாண்டியராஜன் நன்றி கூறினார்.கல்வி சீர் வழங்கும் விழாதேனுார்: ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 75வது சுதந்திர தினம், காமராஜர் பிறந்த நாள், கல்விச் சீர் வழங்கும் முப்பெரும் விழா நடந்தது. கல்வி புரவலர் சாமிக்காளை தலைமை வகித்தார். டி.எஸ்.பி., ஜஸ்டின் பிரபாகரன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை மலர்விழி வரவேற்றார். முன்னாள் மாணவர்கள் பள்ளிக்கான உபகரணங்களை சுதந்திர போராட்ட வீரர்கள் வேடமிட்டும், மயில், ஒயிலாட்டத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.


வட்டார கல்வி வளர்ச்சி அலுவலர் கென்னடி அலெக்சாண்டர், காந்தி மியூசிய செயலாளர் நந்தாராவ், ஊராட்சி தலைவர் பாலு, முன்னாள் தலைவர்கள் மாயாண்டி, சோணைமுத்து மற்றும் கிராமத்தினர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சுழியம் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்தனர்.ரத்த தான முகாம்மதுரை: சவுராஷ்டிரா கல்லுாரி என்.எஸ்.எஸ்., செஞ்சிலுவை சங்கம், மதுரை ஆனந்தம் லயன்ஸ் சங்கம், முன்னாள் மண்டல பொறியாளர் நடராஜன் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. கல்லுாரி செயலாளர் குமரேஷ் துவக்கி வைத்தார்.


முதல்வர் சரவணன், உடற்கல்வி இயக்குனர் ரவீந்திரன் முன்னிலை வகித்தனர். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள் கலைவாணி, உமா, கார்த்திக், செந்தில்குமார், தினேஷ், குணசீலன், செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் விஷ்ணு பிரியா, இந்திய செஞ்சிலுவை சங்க தலைவர் பாரதி பங்கேற்றனர். 150 மாணவர்கள் மதுரை அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு ரத்தம் தானம் வழங்கினர்.சுதந்திர தினவிழா கருத்துக்காட்சிமதுரை: சமுதாய அறிவியல் கல்லுாரி சார்பில் மாத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் மற்றும் கருத்துக் காட்சி நடந்தது. மாணவர்களுக்கு சுதந்திர தின வரலாற்றை விளக்கும் வகையில் பேச்சு, கட்டுரைப்போட்டி, ஓவியம், வினாடிவினா, விழிப்புணர்வு ஓட்டப்பந்தய போட்டி நடத்தப்பட்டது. கல்லுாரி முதல்வர் காஞ்சனா துவக்கி வைத்தார்.


பேராசிரியர்கள் ேஹமலதா, புஷ்பா, கீதா, உதவி பேராசிரியர்கள் இளமாறன், செல்வி கலந்து கொண்டனர்.விழிப்புணர்வு முகாம்கிடாரிப்பட்டி: லதாமாதவன் கல்லுாரியில் சேர்மன் மாதவன் தலைமையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது. சிறப்பு விருந்தினரான டி.எஸ்.பி., ஆர்லியஸ் ரெபோனி, மாணவர்கள் தன்னம்பிக்கை பெறவும், செயலில் வெற்றி பெறவும் புத்தகங்களை படிக்க வேண்டும் என்றார். டுவின்டெக் அகாடமி நிர்வாக இயக்குநர் மகாலிங்கம், முதல்வர்கள் வரதவிஜயன், முருகன், முத்துராஜா, செயல் அலுவலர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மின்னியல் துறை தலைவர் பாண்டியராஜன் செய்திருந்தார். பி.ஆர்.ஓ., பிரபாகரன் நன்றி கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement