Load Image
dinamalar telegram
Advertisement

தாய்ப்பால் வார விழா

மதுரை : மதுரை அரசு மருத்துவமனையில் இந்திய தேசிய குழந்தைகள் நல மருத்துவகுழுமம், குழந்தைகள்நலத்துறை சார்பில் தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது.டீன் ரத்தினவேல் தலைமை வகித்தார். குழந்தைகள் நலத்துறை தலைவர் டாக்டர் பாலசங்கர் பேசுகையில், ''கருவுற்றிருக்கும் போதே பெண்களுக்கு தாய்ப்பால் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.


பொது இடங்களில் தாய்ப்பால் கொடுக்க தனிஅறைகளை அதிகப்படுத்த வேண்டும். பெரிய நிறுவனங்கள் குழந்தை காப்பகம் அமைக்கவும், மகப்பேறு விடுமுறையை அதிகரிக்க வேண்டும்'' என்றார்.தாய்ப்பாலின் அவசியம் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தை மருத்துவமாணவர்கள் வெளியிட்டனர். இந்திய குழந்தைகள் நல மருத்துவக்குழுமத் தலைவர் ராஜராஜேஸ்வரன், செயலாளர் கார்த்திக், மருத்துவ கண்காணிப்பாளர் வீரராகவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement