Load Image
dinamalar telegram
Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அரிதான தனிமம்


பிளாட்டினம் தொகுதியைச் சேர்ந்த இடைநிலைத் தனிமங்களில் ஒன்று இரிடியம். இதன் அணு எண் 77. இது சிறந்த வினைவேகமாற்றி. இயற்கையாகவே பூமியில் மிக அரிதாகக் கிடைக்கும் இந்தத் தனிமம், தற்காலத்தில் மருத்துவ உபகரணம், மின்னணு சாதனம், போர் விமானத்தின் பாகங்கள் உட்பட பல்வேறு விதங்களில் பயன்படுகிறது. பூமி உருவானபோது, இரிடியம் மிகக் குறைவாகவே இருந்தது. ஆனால் 6 கோடி ஆண்டுகளுக்கு முன் விண்பாறை மோதலில், விண்ணிலிருந்து பெருமளவு இரிடியம் பூமிக்கு வந்து சேர்ந்தது எனக் கருதப்படுகிறது.

தகவல் சுரங்கம்

நண்பர்கள் தினம்


அனைவருக்கும் இருக்கும் ஒரே உறவு 'நண்பர்கள்'. மற்ற உறவுகள் இயற்கையாக வருவது. நண்பர்கள் மட்டுமே நாம் தேர்வு செய்யக்கூடியது. அனைவரது வாழ்க்கையிலும் நண்பர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். பல வேறுபாடுகளை கடந்தது நட்பு மட்டுமே. சொத்துகளை அதிகம் சேர்ப்பதை விட நண்பர்களை அதிகம் சேர்ப்பது முக்கியம். நண்பர்கள் தினம் பல நாடுகளில், பல்வேறு தேதிகளில் கடைபிடிக்கப்படுகிறது. ஐ.நா., ஜூலை 30ஐ உலக நண்பர்கள் தினமாக அறிவித்தது. ஆனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஆக., முதல் ஞாயிறு (ஆக., 7) நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement