உடுமலை எஸ்.பி., தனிப்பிரிவு ;போலீசார் கூண்டோடு மாற்றம்
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் எஸ்.பி., தனிப்பிரிவு போலீசார் மாற்றப்பட்டுள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில் ஸ்டேஷன் வாரியாக பணியாற்றி வந்த எஸ்.பி., தனிப்பிரிவு போலீசார் பலர் மீது, 'டாஸ்மாக்' வசூல், கஞ்சா, லாட்டரி விற்பனை என, சட்டவிரோத செயல்களுக்கு உடந்தையாக இருப்பது, ஸ்டேஷன் எல்லை பகுதியில் நடக்கும் சட்டம்-ஒழுங்கு உட்பட பிரச்னைகள் குறித்து மாவட்ட எஸ்.பி.,க்கு உரிய தகவல் அளிக்காமல் இருத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுந்தன. பல ஆண்டுகளாக ஒரே ஸ்டேஷனில் எஸ்.பி., போலீசார் பணிபுரிந்துவந்தனர்.இந்நிலையில், உடுமலை, அவிநாசி, காங்கயம், பல்லடம், தாராபுரம் ஆகிய சப்-டிவிஷன்களில் பணியாற்றி வந்த எஸ்.பி., தனிப்பிரிவு போலீசார் பலரை இடமாற்றம் செய்து எஸ்.பி., செஷாங் சாய் உத்தரவிட்டுள்ளார். பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட போலீசார், ஸ்டேஷன் டியூட்டிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.உடுமலை சப்-டிவிஷனுக்குட்பட்ட இடங்களில் நடக்கும் சட்டவிரோத செயல்கள் உள்ளிட்ட பல தகவல்களை முறையாக எஸ்.பி., பார்வைக்கு, எஸ்.பி., தனிப்பிரிவு போலீசார் கொண்டு செல்லாமல் மறைப்பதாகவும், இவர்களில் சிலர் 'தனி ராஜாங்கம்' நடத்தி வருவதாகவும் புகார்கள் எழுந்தன. இதனால், உடுமலை சப்-டிவிஷனை சேர்ந்த எஸ்.பி., தனிப்பிரிவு போலீசார் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!