Load Image
Advertisement

அரிய வகை நோயால் பாதிப்புகுழந்தைக்கு இலவச சிகிச்சை

திருவனந்தபுரம்-அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 3 வயது குழந்தைக்கு, கேரள மருத்துவமனை வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளது.


தமிழகத்தைச் சேர்ந்த ஏழ்மையான குடும்பத்தினரின் 3 வயது ஆண் குழந்தை, 'ஹிர்ஷ்ஸ்ப்ரங்' எனப்படும் அரிய பிறவி நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் சிகிச்சை மேற்கொண்டும் பலனளிக்கவில்லை. இந்நிலையில், குழந்தை நலப்பிரிவு மருத்துவர் ஒருவரின் அறிவுறுத்தலின்படி, கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அந்த குழந்தையை பெற்றோர் அனுமதித்தனர்.


அங்கு அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இது குறித்து, சிகிச்சைஅளித்த டாக்டர் ரெஜு ஜோசப் தாமஸ் கூறியதாவது:ஹிர்ஷ்ஸ்ப்ரங் என்ற பிறவி நோய் மிக அரிதானது. பிறந்தது முதல் குடல் இயக்கம் குறைவாக இருக்கும். பெருங்குடல் தசைகளில் நரம்பு செல்கள் இல்லாமல் போவதால் இந்த நோய் வருகிறது. இதற்காக, இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்தோம். அந்தக் குடும்பத்தினர் ஏழ்மையான நிலையில் இருந்ததால் இலவசமாகவே சிகிச்சை அளித்தோம். தற்போது குழந்தை நலமுடன் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement