Load Image
dinamalar telegram
Advertisement

பெண்களுக்கு பதிலாக ஆண்கள் பதவியேற்பு ம.பி.,பஞ்சாயத்துகளில் நடந்த பஞ்சாயத்து

Tamil News
ADVERTISEMENT

போபால் :மத்திய பிரதேசத்தில் பல பஞ்சாயத்துகளில், வெற்றி பெற்ற பெண்களுக்கு பதிலாக அவர்களுடைய குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் பதவியேற்ற விவகாரம் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஒரு அதிகாரி 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.

பிரச்னை
ம.பி.,யில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பஞ்சாயத்துகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் வெற்றி பெற்ற வர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சியில், பல மாவட்டங்களில் பிரச்னை ஏற்பட்டது.குறிப்பாக, சாகர், திமோஹ் மாவட்டங்களில் உள்ள பஞ்சாயத்துகளில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பதிலாக, அவர்களுடைய குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் பதவியேற்றுஉள்ளனர். இது தொடர்பான, 'வீடியோ' சமூக வலை தளங்களில் வெளியானது. இதையடுத்து, வெற்றி பெற்ற பெண்ணுக்குப் பதிலாக ஆண்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்ததாக, பஞ்சாயத்து அதிகாரி ஆசாராம் சாஹு சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். மற்ற பஞ்சாயத்துகளிடம் இருந்து விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.

சஸ்பெண்ட்
''வெற்றி பெற்ற பெண்களை பலமுறை அழைத்தும் அவர்கள் வர மறுத்துள்ளனர். எதுவாக இருந்தாலும் வீட்டில் உள்ள ஆண்களிடம் கேட்கும்படி கூறுகின்றனர். ''அதனாலேயே, மாற்று ஏற்பாடாக அவர்களுடைய குடும்ப ஆண் உறுப்பினருக்கு பதவிப் பிரமாணம் செய்யப்பட்டது,'' என, சஸ்பெண்ட் செய்யப்பட்ட பஞ்சாயத்து அதிகாரி ஆசாராம் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (3)

  • அப்புசாமி -

    பெண்களுக்கு மதிப்பும், மரியாதையும்.குடுத்து உயிரோடு விட்டு வைத்துள்ளார்கள்.

  • sankar - சென்னை,இந்தியா

    அற்புதமான பிஜபீ மாடல் ஆட்சிக்கு நல்ல உதாரண்ம். இங்கே குய்யோ முய்யோ போடும் அண்ணாமலையை அங்கே அனுப்பி ட்ரைனிங்க் தரலாம்.

    • raja - Cotonou,பெனின்

      நல்லா படி அவர்கள் எல்லோரும் குடும்ப பெண்கள் கணவருக்கு கட்டு பட்டு நடக்கும் கண்ணகிகள்.. இங்கே உள்ள திருட்டு திராவிட அக்கா லு லு பெண்கள் இல்லை...

Advertisement