Load Image
dinamalar telegram
Advertisement

தொழிலாளி கொலை: உறவினர்கள் மறியல்

திருநெல்வேலி:திருநெல்வேலி தச்சநல்லுார் பைபாஸ் ரோடு சாய்பாபா கோயில் அருகே டூவீலரில் சென்ற கட்டட தொழிலாளி பேச்சிராஜனை 24, வெட்டி கொலை செய்த ஆறு பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

பேச்சிராஜன் திருநெல்வேலி தச்சநல்லுார் பைபாஸ் ரோடு சாய்பாபா கோயில் சென்றார். டூவீலர்களில் வந்த ஆறு பேர் கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். உறவினர்கள் மதுரை பைபாஸ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

போலீஸ் துணை கமிஷனர்கள் சீனிவாசன், அனிதா மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 2020 ஜன.,ல் கரையிருப்பு பகுதியில் மாசானமூர்த்தி கொலை செய்யப்பட்தற்கு பழிக்கு பழியாக பேச்சிராஜன் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement