ADVERTISEMENT
புதுடில்லி :நம் நாட்டின் 75வது ஆண்டு சுதந்திர தின நிறைவு விழாவை முன்னிட்டு, 'இந்தியா கி உதான்' என்ற சிறப்பு பக்கத்தை 'கூகுள்' நிறுவனம் உருவாக்கியுள்ளது.
நம் நாட்டின் 75வது ஆண்டு சுதந்திர தினம் கடந்த ஓராண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உலக அளவில் பிரபலமாக விளங்கும் கூகுள் தேடுதளம், நம் நாட்டின் சுதந்திர தின 75வது நிறைவு விழாவை முன்னிட்டு, 'இந்தியா கி உதான்'
என்ற சிறப்பு பக்கத்தை உருவாக்கியுள்ளது.
இதில், 1947ல் இருந்து தற்போது வரை நாடு கடந்து வந்த பாதை, பல்வேறு துறைகளில் அடைந்துள்ள வளர்ச்சி உள்ளிட்ட பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அரிய 'வீடியோ' மற்றும் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. நம் நாட்டின் பொக்கிஷங்களாக கருதப்படும் ஆளுமைகள் குறித்த விபரங்களும் இந்த சிறப்பு பக்கத்தில் இருக்கின்றன. இந்த பக்கத்துக்கு செல்ல https://artsandculture.google.com/project/india-ki-udaanஎன்ற இணையதள முகவரியை பயன்படுத்தலாம். இதை, புதுடில்லியில் நடந்த நிகழ்ச்சியில் கூகுள் நிறுவன அதிகாரிகள் முன்னிலையில், மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி துவக்கி வைத்தார்.

மத்திய - மாநில அரசுகள் சார்பில் விதவிதமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. வரும் 15ம் தேதி 75வது ஆண்டு நிறைவு பெறுகிறது. இதையொட்டி மத்திய அரசு பல சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. அனைத்து அலுவலகங்கள், வீடுகளில் தேசிய கொடி பறக்க விட பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில், உலக அளவில் பிரபலமாக விளங்கும் கூகுள் தேடுதளம், நம் நாட்டின் சுதந்திர தின 75வது நிறைவு விழாவை முன்னிட்டு, 'இந்தியா கி உதான்'
என்ற சிறப்பு பக்கத்தை உருவாக்கியுள்ளது.
இதில், 1947ல் இருந்து தற்போது வரை நாடு கடந்து வந்த பாதை, பல்வேறு துறைகளில் அடைந்துள்ள வளர்ச்சி உள்ளிட்ட பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அரிய 'வீடியோ' மற்றும் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. நம் நாட்டின் பொக்கிஷங்களாக கருதப்படும் ஆளுமைகள் குறித்த விபரங்களும் இந்த சிறப்பு பக்கத்தில் இருக்கின்றன. இந்த பக்கத்துக்கு செல்ல https://artsandculture.google.com/project/india-ki-udaanஎன்ற இணையதள முகவரியை பயன்படுத்தலாம். இதை, புதுடில்லியில் நடந்த நிகழ்ச்சியில் கூகுள் நிறுவன அதிகாரிகள் முன்னிலையில், மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி துவக்கி வைத்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!