Load Image
dinamalar telegram
Advertisement

ஓசி பரோட்டா பார்சல் தராத ஓட்டல் ஊழியர் கொலை:ஆறு ரவுடிகளுக்கு வலை

தூத்துக்குடி:துாத்துக்குடி காமராஜ்நகரில் ஓசி பரோட்டா பார்சல் தராத பிரச்னையில் ஓட்டல் ஊழியர் செந்தில்முருகனை வெட்டி கொலை செய்த ஆறு பேர் கும்பலை போலீசார் தேடுகின்றனர். அக்கும்பல் வெட்டியதில் மேலும் மூவர் காயமுற்றனர்.

காமராஜ் நகரில் கருப்பசாமியின் ஓட்டல் உள்ளது. இங்கு முடிவைத்தானேந்தல் செந்தில் முருகன், மடத்தூர் தேவராஜ், சாயர்புரம் சாமுவேல் பணிபுரிந்து வந்தனர். தூத்துக்குடி மூன்றாம்மைல் கற்குவேல் உட்பட 6 பேர் ஓட்டலில் பரோட்டா சாப்பிட்டனர்.

ஓசி பரோட்டா பார்சல் கேட்டு போதையில் தகராறில் ஈடுபட்டனர். பின் கலைந்து சென்றனர்.அன்றிரவு 11:30 மணியளவில் ஓட்டலில் பணிமுடிந்து புறப்பட்ட ஓட்டல் ஊழியர்களை ஆறு பேரும் துரத்தி அரிவாளால் வெட்டினர். இதில் செந்தில்முருகன் சம்பவயிடத்திலேயே இறந்தார். தேவராஜ், சாமுவேல், பக்கத்து கடைக்காரர் பழனி முருகனுக்கும் வெட்டு விழுந்தது. கற்குவேல் உள்ளிட்ட 6 பேரை தெற்கு போலீசார் தேடுகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement