Load Image
dinamalar telegram
Advertisement

மன்னார்குடி அருகே5 கற்சிலைகள் மீட்பு

Tamil News
ADVERTISEMENT
திருவாரூர்:மன்னார்குடி அருகே, ஐந்து கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே, மாளிகைமேடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன், 50; விவசாயி. மாளிகைமேடில், தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி வருகிறார். கழிப்பறை மற்றும் சுற்றுச்சுவர் கட்ட, நேற்று பள்ளம் தோண்டினார்.
நிலத்தில், 6 அடி ஆழத்திற்கு தோண்டியபோது, கற்சிலைகள் இருப்பதை தொழிலாளர்கள் பார்த்தனர். அவற்றை எடுத்த போது, குரு தட்சிணாமுர்த்தி மற்றும் சேதமடைந்த, நான்கு இதர சுவாமி சிலைகள் இருந்தது தெரியவந்தன.மன்னார்குடி தாசில்தார் ஜீவானந்தத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வருவாய் துறை ஊழியர்கள், சுவாமி சிலைகளை எடுத்துச் சென்றனர். தொல்லியல் துறையிடம், ஐந்து சிலைகளும் ஒப்படைக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement