Load Image
dinamalar telegram
Advertisement

காலுறை சொல்லும் நீரிழிவு ஜாதகம்



- சேதுராமன் சாத்தப்பன் -

உலக சுகாதார அமைப்பு புள்ளிவிவரப்படி, தற்போது உலகில், 45 கோடி நீரிழிவு நோயாளிகள் உள்ளனர்; வரும், 2045ல் இந்த எண்ணிக்கை, 70 கோடியை எட்டும்; கடந்த, 2019ம் ஆண்டு கணக்குப்படி, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் 7.7 கோடி நீரிழிவு நோயாளிகள் உள்ளனர். இதில், 57 சதவீதம் பேர், நீரிழிவு நோய் இருப்பதே தெரியாமல் வாழ்கின்றனர்.இந்தியா 'உலகின் நீரிழிவு தலைநகரம்' என்று கூறப்படுகிறது. நோயாளிகளில் பலர், ரத்த சர்க்கரை அளவை கண்காணிக்க, நாள்தோறும் பலமுறை விரல்களைக் குத்தி ரத்தம் எடுப்பதை வெறுக்கின்றனர்; தொலைதுார மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு உதவியுடன், நீரிழிவு சிக்கல்களை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் தடுப்பதற்கான மலிவு விலையில் அணியக்கூடிய தொழில்நுட்பத்தை பீட்விங்ஸ்(Feetwings) என்ற 'ஸ்டார்ட் அப்' நிறுவனம் உருவாக்கியுள்ளது.நீரிழிவு போன்ற வாழ்க்கை முறை நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் நரம்பியல், உயர் ரத்த அழுத்தம், பார்வை இழப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான சிக்கல்களை உருவாக்கும் தொடர்ச்சியான ஆபத்தை எதிர்கொள்கின்றனர். தொடர்ச்சியான மற்றும் நிலையான கண்காணிப்பு இல்லாததால் இது நிகழ்கிறது.பிரபல ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் சித்தாந்த் பார்கவா, உயிரித்தொழில்நுட்ப வல்லுனர்கள் ஹிருத்திக் ஜெய்ஸ்வால், அனிமேஷ் குமார் துவங்கிய, 'பீட்விங்ஸ்' நிறுவனம், நீரிழிவு நோயாளிகள் உபயோகிக்கும் வகையில், சிறப்பு காலுறைகளை(சாக்ஸ்) உருவாக்கி வருகிறது. கால் வெப்பநிலை, ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, இடையூறற்ற ஸ்பெக்ட்ரோஸ்கோபி மூலம் ரத்த குளுக்கோஸைக் கண்டறிதல், ரத்த சர்க்கரை குறைவு அல்லது இதயப் பக்கவாதம் ஏற்பட்டால் அவசர எச்சரிக்கைகளை வழங்குதல் என, நீரிழிவு சிக்கல்களை துவக்கத்திலேயே கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் காலுறை உதவுகிறது.

எப்படி தயாரிக்கப்படுகிறது?
காலுறை, ஸ்மார்ட் நுாலில் இருந்து உருவாக்கப்படுகிறது; ஒரு மி.மீ., தடிமன் கொண்ட சென்சார் லேயரை நெசவு செய்ய உதவுகிறது; வழக்கமான காலுறையாகவும் பயன்படுத்தலாம்; சாதாரண கம்பளி அல்லது பருத்தி நுாலால் நெய்யப்படுகிறது; எளிதாக இயந்திரத்தில் துவைக்கக்கூடியது மற்றும் உலர்த்தக்கூடியது; பயன்படுத்த எளிதானது.இயந்திர கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் இந்த காலுறையின் சென்சாரில் இருந்து, அணிபவரின் மொபைல் போனில் இருக்கும் செயலிக்கு செய்திகளை அனுப்புகிறது. தவறான தரவுகளைக் குறைக்க உதவுகிறது. இக்கண்டுபிடிப்பு விரைவில் மார்க்கெட்டுக்கு வரவுள்ளது. இணையதளம்: www.feetwings.comஉங்கள் சந்தேகங்களுக்கு: இ-மெயில்: sethuraman.sathappan@gmail.com. மொபைல்போன்: 09820451259, இணையதளம்: www.startupandbusinessnews.com
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement