ADVERTISEMENT
திருப்பூர்:பெண்ணை கொன்று, 10 லட்சம் ரூபாய், 42 சவரன் நகைகளை கொள்ளையடித்த மூவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர், சோளிபாளையம், ஸ்ரீனிவாசா நகரைச் சேர்ந்த பனியன் நிறுவன உரிமையாளர் கோபாலன், 65, அவரது மனைவி முத்துலட்சுமி, 60. அதே பகுதி, குமார் நகரில், இரு தளம் கொண்ட கட்டடத்தில், 9 வீடுகளை வாடகைக்கு விட்டு, தரைத்தளத்தில் தம்பதி வசித்தனர். நேற்று முன்தினம் மாலை, கோபாலன் வீட்டுக்கு சென்ற போது, முத்துலட்சுமி வீட்டில் துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
பீரோவில் இருந்த, 10 லட்சம் ரூபாய், 42 சவரன் நகை கொள்ளை போனது.போலீஸ் கமிஷனர் பிரபாகரன் உத்தரவில், தனிப்படை போலீசார் 'சிசிடிவி' பதிவுகளை சேகரித்து விசாரித்தனர். இதில், ஈரோடு மாவட்டம், கொடுமுடி லாட்ஜில் தங்கியிருந்த, கரூரைச் சேர்ந்த அருண், 24, தஞ்சாவூரைச் சேர்ந்த அமரன், 23, ஈரோடைச் சேர்ந்த தினேஷ், 24 ஆகியோர் சிக்கினர்.
விசாரணையில், மூவரும் முத்துலட்சுமியை கொலை செய்து, கொள்ளையடித்தது தெரிய வந்தது. அவர்களிடம், 9.82 லட்சம் ரூபாய், 42 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசார் கூறியதாவது:கைதான மூவரும் எலக்ட்ரீஷியன்கள். ஜூலை, 30ம் தேதி கோபாலன் வீட்டுக்கு, 'பிளம்பிங்' வேலைக்கு அருண் சென்றுள்ளார். வீட்டில் தம்பதி மட்டுமே இருப்பதையும், பணப்புழக்கம் இருப்பதையும் தெரிந்து கொண்ட அவர், அமரன், தினேஷுடன் சேர்ந்து கோபாலன் வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டார்.
மூவரும் கோபாலன் வீட்டுக்கு சென்றனர். முத்துலட்சுமியிடம், பிளம்பிங் பணியை முடிக்க வில்லை என்று கூறி, உள்ளே சென்றுள்ளனர்.பின், அவரது கழுத்தை நெரித்து கொன்று, அறையில் துாக்கில் தொங்க விட்டுள்ளனர். பணம், நகையை கொள்ளையடித்து விட்டு, மிளகாய் பொடியை துாவி விட்டு சென்றனர்.இவ்வாறு, போலீசார் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!