முதல்வருக்கு வரவேற்பு: செயற்குழு முடிவு
கோவை:ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் நேற்று வரதராஜபுரத்தில் நடந்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் கண்ணப்பன், பொங்கலுார் பழனிச்சாமி, மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய, நகர நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். இதில், 24ம் தேதி கோவை வரும் தமிழக முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!