ADVERTISEMENT
கோவை:மதுக்கரை போலீஸ் எல்லைக்குட்பட்ட ஈச்சனாரி பகுதியில் கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பதாக, எஸ்.ஐ., கவியரசுக்கு தகவல் கிடைத்தது. பை-பாஸ் ரோடு சந்திப்பு அருகே காட்டுப்பகுதியில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது, கஞ்சா புகைத்துக்கொண்டிருந்த ஒருவர் சிக்கினார். விசாரணையில், மலுமிச்சம்பட்டி அருகே தனியார் தொழிற்சாலை அறையில் தங்கியிருக்கும் வட மாநிலத்தவரிடம் கஞ்சா வாங்கியது தெரிந்தது. அங்கு சென்ற போலீசார், உத்தரபிரதேசத்தை சேர்ந்த கோகுல், 22, தர்மேந்திர பாரதி, 22 ஆகிய இருவரை கைது செய்தனர். விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த, 10.870 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!