ADVERTISEMENT
பந்தலுார்:பந்தலுார் அருகே அய்யன்கொல்லி பகுதியில் காலை நேரத்தில் யானைகள் பஜார் பகுதியில் உலா வந்ததால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
நீலகிரி மாவட்டம், பந்தலுார் மற்றும் சுற்றுப்பகுதிகளில் இரவு, 7:00 மணிக்கு மேல் காட்டு யானைகள், மக்கள் குடியிருப்பு பகுதிகள், சாலைகளில் உலா வருகிறது. இதை கட்டுப்படுத்த வனத்துறையினர் தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றனர். தற்போது, மழை, மேகமூட்டம் காரணமாக, யானைகள் வருவதை கண்காணிக்க முடியாத நிலையில் உள்ளனர்.
நேற்று முன்தினம், அய்யன்கொல்லி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு ஆண் யானைகள், செறியேறி குடியிருப்பு பகுதிகளில் வந்த இரண்டு ஆண் யானைகள், அங்குள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து விளை பொருட்களை சேதப்படுத்தியது.
தொடர்ந்து, அரசு பழங்குடியினர் நடுநிலைப்பள்ளி வளாகம் வழியாக வந்த யானைகள், தடுப்பை உடைத்து பஜார் வழியாக நேற்று காலை 7:30 மணிக்கு உலா வந்தது.வனக்காப்பாளர்கள் ராமச்சந்திரன், ராஜேஷ்குமார் தலைமையிலான குழுவினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். திடீரென யானைகள் கடைவீதியில் நடந்து வந்ததால், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!