ADVERTISEMENT
கோபி:பவானி ஆற்று உபரிநீரால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், கொடிவேரி தடுப்பணை மூழ்கியது. இதனால் சுற்றுலா பயணியருக்கு தடை நீடிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து, பவானி ஆற்றில் திறக்கப்பட்ட, 6,995 கன அடி தண்ணீர், கொடிவேரி தடுப்பணைக்கு, நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு வந்தது. இதனால் நேற்று முன்தினம் காலை முதல், கொடிவேரி தடுப்பணைக்குள் சுற்றுலா பயணியர் நுழைய, பொதுப்பணித்துறையினர் தடை விதித்தனர்.
நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு, 16 ஆயிரத்து, 860 கன அடியாக நீர்வரத்து உயர்ந்தது. இதனால் தடுப்பணையை மூழ்கடித்து வெள்ளம் சீறியது.நேற்று காலை, 6:00 மணிக்கு, வினாடிக்கு, 25 ஆயிரத்து, 435 கன அடி தண்ணீர் வந்ததால், தடுப்பணை வளாகம் முழுக்க மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடானது.
இதனால் இரண்டாவது நாளாக தடுப்பணையில், சுற்றுலா பயணியர் நுழைய தடை நீடிக்கப் பட்டது. பவானி ஆற்று வெள்ளப்பெருக்கால், மாக்கிணாங்கோம்பை பஞ்., கணேசபுரத்தில் வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால், 16 குடும்பத்தினர் மீட்கப்பட்டு, அருகேயுள்ள கோவிலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!