ADVERTISEMENT
திருப்பூர்:'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து, கூட்ஸ்ெஷட்டில் தண்டவாளங்களை சீரமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள கூட்ஸ்ெஷட்டுக்கென பிரத்யேக தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 1ம் தேதி சரக்குடன் பெட்டிகளை கழற்றி விட்டு, மெயின் டிராக் நோக்கி வந்த ரயில் இன்ஜின் எதிர்பாராதவிதமாக தடம் புரண்டது. பிரத்யேக தண்டவாளம், அடுத்தடுத்த ரயில் வர வாய்ப்பு இல்லை. இன்ஜின் வேகம் குறைவு என்பதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.ஈரோட்டில் இருந்து பொறியியல் குழுவினர் வந்து, இன்ஜினை தண்டவாளத்தில் துாக்கி நிறுத்தினர். ஸ்டேஷனில் இருந்து கூட்ஸ்ெஷட் செல்லும் தண்டவாளத்தை சரிவர பராமரிக்காமல் விட்டதால், ரயில் இன்ஜின் தடம் புரண்டது. தண்டவாளத்தின் அடிப்பகுதியில் ஜல்லிக்கற்கள் குறைவாக உள்ளது; மண் செருகி காணப்படுகிறது. இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் படத்துடன், செய்தி வெளியிடப்பட்டது.இதையடுத்து, ஈரோட்டில் இருந்து ரயில்வே பொறியியல் மற்றும் பராமரிப்பு குழுவினர் மூலம் தண்டவாளத்தை ஒழுங்குபடுத்தும் பணி நேற்று துவங்கியது.இருபதுக்கும் அதிகமான ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். தண்டவாளத்தில் உள்ள மண் அகற்றப்பட்டு, புதிய ஜல்லிக்கற்கள் நிரப்பப்பட உள்ளது. குழியாக உள்ள இடங்களில் நிலம் பலமில்லாமல் இருப்பதால், மண் கொட்டி சமப்படுத்தப்பட உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!