இறுதி கட்டத்தில் ஸ்மார்ட் ரோடு
திருப்பூர்:திருப்பூரில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. பல்வேறு முக்கிய ரோடுகள் ஸ்மார்ட் ரோடாக அமைக்கப்பட்டு வருகின்றன. எம்.எஸ்., நகரிலிருந்து கொங்கு மெயின் ரோடு வழியாக இரண்டாவது ரயில்வே கேட் அருகே 2 கி.மீ., நீளத்துக்கு ஸ்மார்ட் ரோடு அமைக்கப்பட்டு வருகிறது.இந்த ரோடு பணி பெருமளவு நிறைவு பெற்றுள்ளது. இதில் தற்போது அப்பாச்சி நகர் ரோடு இணையும் பகுதியில் 10 மீட்டர், ரயில்வே கேட் அருகே எம்.ஜி.ஆர்., நகர் அருகே சில மீட்டர் அளவும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.அப்பாச்சி நகர் இணையும் இடத்தில் பிரதான குடிநீர் குழாய் பதிப்பு பணி காரணமாக பணி தாமதமானது. தற்போது அங்கு முன்னர் இருந்த ரோடு இடித்து அப்புறப்படுத்தும் பணி நடக்கிறது. அங்கு கான்கிரீட் கலவை கொட்டி ஸ்மார்ட் ரோடு போடும் பணி இரண்டொரு நாளில் முடிவடையும் எனத் தெரிவிக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!