Load Image
dinamalar telegram
Advertisement

அஞ்சலக ஊழியர்கள் ஊர்வலம்

தேவகோட்டை : 75வது ஆண்டு சுதந்திரதின விழாவை முன்னிட்டு மூன்று நாட்கள் தேசிய கொடியேற்றி கொண்டாடஇந்திய மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தேசியக் கொடி தயாரித்து அஞ்சலகங்கள் மூலம் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேவகோட்டை அஞ்சலகத்தில் ரூ.25க்கு விற்பனை செய்யப்படுகிறது.தேவகோட்டை தலைமை அஞ்சலக ஊழியர்கள் தலைமை போஸ்ட் மாஸ்டர் செல்வராஜ் தலைமையில் அஞ்சலகத்தில் கொடியேற்றி முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தனர். வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.


தலைமை அஞ்சலக அதிகாரி செல்வராஜ் கூறுகையில், மக்கள் அனைத்து அஞ்சலகங்களிலும் கொடியை வாங்கிக் கொள்ளலாம். குறிப்பாக ஆக., 7, 14ம் தேதி ஞாயிறு, 9ம் தேதி மொகரம் விடுமுறை நாட்களிலும் விற்பனை உண்டு, என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement