Load Image
dinamalar telegram
Advertisement

என்ன தான் தீர்வு? இலவசங்களால் தவிக்கும் மாநில அரசுகள்: முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிரம்

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அறிவித்த இலவச திட்டங்களை நிறைவேற்ற பல்வேறு மாநிலங்களும் தவித்து வருகின்றன.
Latest Tamil News
இந்நிலை தொடர்ந்தால் இலங்கைக்கு ஏற்பட்டதை போன்ற நிதி நெருக்கடி நம் நாட்டிலும் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த இலவச கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.இலவசங்கள் தேவையா, இல்லையா என்ற விவாதம் பொதுவாக தேர்தல் நேரங்களில் மட்டுமே எழுகின்றன. \

மற்ற நேரங்களில் பொருளாதார நிபுணர்கள் பங்கேற்கும் கருத்தரங்குகளில் வெறும் பேசு பொருளாக மட்டுமே இவை உள்ளன. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தெரிவித்த கருத்து, இலவசங்கள் குறித்து சிந்திக்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் உருவாக்கி உள்ளது.


பொருளாதார பிரச்னை


பா.ஜ., செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு மீது, தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு சமீபத்தில் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.அதில், தேர்தல்களின் போது மக்களுக்கு இலவசங்கள் வழங்குவதாக அரசியல் கட்சிகள் அறிவிப்பது, நாட்டின் தீவிர பொருளாதார பிரச்னைக்கு வழிவகுப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இதை கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குமாறு நிடி ஆயோக், நிதி கமிஷன், சட்ட கமிஷன், ரிசர்வ் வங்கி, ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

மேலும், இந்தப் பிரச்னையில் அரசுக்கு ஆலோசனை வழங்க, ஒரு குழு அமைக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.இலவசங்கள் வழங்கும் கலாசாரத்தை பொருளாதார கோணத்தில் அணுக வேண்டிய தேவை உள்ளது. இந்நிலை தொடர்ந்தால், இலங்கையில் ஏற்பட்டதை போன்ற பொருளாதார நெருக்கடியில் நம் நாடும் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இலங்கை அரசு, இன்றைக்கு 6 லட்சம் கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது. நம் நாட்டிலும் பெரும்பாலான மாநிலங்கள் இந்நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. உதாரணத்திற்கு தமிழக அரசுக்கு, 6.59 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. உ.பி.,க்கு 6.53 லட்சம் கோடி ரூபாய் கடனும், மஹாராஷ்டிராவுக்கு 6.80 லட்சம் கோடி ரூபாய் கடனும், மேற்கு வங்கத்துக்கு 5.62 லட்சம் கோடி ரூபாய் கடனும், குஜராத்துக்கு 4.02 லட்சம் கோடி ரூபாய் கடனும் உள்ளன.அந்தந்த மாநில அரசுகள், தேர்தலுக்கு முன் அறிவித்த இலவச திட்டங்களே இந்த கடன் சுமைக்கு காரணமாக சொல்லப்படுகின்றன.


வரி தள்ளுபடி


இலவச லேப் டாப், சைக்கிள், பெண்களுக்கு இலவச பஸ் பயணம், குறிப்பிட்ட, 'யூனிட்' வரை இலவச மின்சாரம், பொது உணவு வினியோகத்தில் வழங்கப்படும் இலவச பொருட்கள், வேலை வாய்ப்பு உத்தரவாத திட்டங்கள், கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான உதவித் தொகை, இலவச மருத்துவம் என, பல்வேறு விதங்களில் இந்த இலவசங்கள் வழங்கப்படுகின்றன.மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் மானியங்களில் பெரும்பாலான தொகை இலவசங்களுக்கே செலவிடப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. Latest Tamil News
மக்களுக்கு வழங்கப்படும் இதுபோன்ற இலவசங்கள் மட்டுமே தலைப்பு செய்திகளில் இடம்பெறுகின்றன. அதேநேரம், பெரு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வரி தள்ளுபடிகள் பெரும்பாலும் கவனத்துக்கே வருவதில்லை. அவையும் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுக்கின்றன.இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, 'இலவசங்கள் வழங்கும் கலாசாரம் நாட்டுக்கு பெரும் கேடாக முடியும்.

இதை அரசியல் கட்சிகள் கைவிட வேண்டும்' என, பிரதமர் மோடி தெரிவித்தார்.பல்வேறு இலவச திட்டங்கள் வாயிலாக டில்லியில் ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி, அதே இலவச அறிவிப்புகள் வாயிலாகவே பஞ்சாபிலும் ஆட்சியை பிடித்துஉள்ளது.பஞ்சாப் மக்களுக்கு, 300 யூனிட் வரையில் மின்சாரம் இலவசம், 18 வயதை கடந்த பெண்கள் அனைவருக்கும் மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் 2,500 ரூபாயாக உயர்வு, 6,000 இலவச கிளினிக்குகள் என, இலவசங்களை அள்ளிவிட்டு அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியை பிடித்தார்.

இதே வியூகத்தை குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலிலும் பின்பற்றி ஆட்சியை பிடிக்கப் போவதாக அறிவித்துள்ளார். இதை பா.ஜ., எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.ஆட்சியில் உள்ளவர்கள் இலவசங்களை ஒழிக்க வேண்டும் என குரல் கொடுக்கின்றனர். ஆட்சியை பிடிக்க முயல்பவர்கள் இலவச திட்டங்களை வாரி வழங்குகின்றனர். இதன் அடிப்படையில் அவர்கள் ஆட்சிக்கு வரும்போது, வாக்குறுதியை நிறைவேற்ற திணற வேண்டிய நிலை ஏற்படுகிறது.


மீண்டும் வசூல்


ஆளும் கட்சியினர் எவ்வளவு இலவசங்களை வாரி வழங்கினாலும், வரி என்ற பெயரில் வேறு விதமாக அதை மீண்டும் வசூல் செய்துவிடுவர் என்பதையும் மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். பொருளாதார நிலையில் நலிவுற்றவர்களுக்கு வழங்கப்படும் இலவசங்களை தவிர மற்றவை நம் எதிர்கால சந்ததியை பாதிக்கும் என்பதையும் உணர வேண்டும். நம் ஜனநாயகத்திற்கு கேடு விளைவிக்கும் இலவசங்களில் இருந்து எப்படி மீளப்போகிறோம் என்பதே இன்றைய மிகப் பெரிய கேள்வியாக தொக்கி நிற்கிறது.

-நமது சிறப்பு நிருபர்-
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (13)

 • அப்புசாமி -

  அரசியல் என்பதே ஏமாற்றுக்காரர்களின் கூடாரம்.

 • ஆரூர் ரங் -

  குஜராத் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் இலவச மின்சாரம் தருவதாக வாக்குறுதியளித்தது . ஆனால் மோதி நாங்கள் இலவச மின்சாரம் தரமாட்டோம்.🤔 ஆனால் தடையற்ற மின்சாரம் தருவேன் என வாக்குறுதி கொடுத்தார். மக்கள் மோதிக்கே வாக்களித்தனர். இது மற்ற மாநில மக்களுக்கு ஒரு சிறந்த பாடம்.

 • amuthan - kanyakumari,இந்தியா

  அந்த பதினைந்து லட்சம் ரூபாய் வங்கி கணக்கில் வந்துவிட்டால் போதும். அதற்கு பிறகு இலவசம் தேவையில்லை

 • Asokan - chennai,இந்தியா

  First govt should decide what is freebhi?Many social impact schemes like cycles to girl students,free laptops to students etc shouldn't considered as freebhi.Govt should stop the writeoff loans to big corporates. Govt should provide free education minimum upto 12 & provide education loans for degree with minimum intrest.It shoul also stop giving freebhis to MLAs/MPs including pension.

 • Gnanam - Nagercoil,இந்தியா

  சாலைகள் அமைத்தல், செப்பனிடல், கால்வாய்கள் வெட்டுதல், தூர்வாருதல், குளம் குட்டைகளை பராமரித்தல், காடுகளில் தேவைக்கேற்ப மரங்கள் நடுதல், அவைகளை பராமரித்தல் போன்ற வேலைகள் எப்போதும் தேவை. வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை. விலைவாசிக்கேற்றாற்போல் சம்பளம். கொடுத்து மக்களை ஊக்குவித்தால், எல்லா இலவசங்களையும் அடியோடு நிறுத்தி விடலாம். அத்துடன் மக்களும் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ்வார்கள்.

Advertisement