Load Image
dinamalar telegram
Advertisement

விவசாயியை தாக்கிய இருவர் கைது

திருப்பூர்:அவிநாசிபாளையம், வட்டமலைபாளையம், தண்டுக்காரர் தோட்டத்தை சேர்ந்தவர் சண்முகம், 42. இவருக்கும், பக்கத்து தோட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் இடையே கடந்த, பத்து ஆண்டுகளாக தென்னை மரத்தின் தேங்காய், மட்டை விழுவது தொடர்பாக இடப்பிரச்னை இருந்து வந்தது.கடந்த, 3ம் தேதி, இருவருக்குமிடையே வாய்தகராறு ஏற்பட்டது. முன்விரோதத்தின் காரணமாக ஆறுமுகம், 45, அவரது சகோதரர் திருநாவுக்கரசு, 42 ஆகியோர், மண்வெட்டியால் சண்முகத்தை தாக்கினர். காயமடைந்த அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக, ஆறுமுகம், திருநாவுக்கரசு ஆகியோரை அவிநாசிபாளையம் போலீசார் கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement