போக்குவரத்து ஊழியர் சம்பள பேச்சில் முன்னேற்றம்:தொழிற்சங்கத்தினர் கருத்து
திருப்பூர்:மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சம்பள ஒப்பந்தம் வகுக்கப்படுகிறது.புதிய சம்பள ஒப்பந்த பேச்சு துவங்க போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த 3ம் தேதி போக்குவரத்து துறை அமைச்சர் - தொழிற்சங்கத்தினர் இடையே பேச்சு நடந்தது.இதில் குறிப்பிட்ட சில கோரிக்கைகளை ஏற்பதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.மாவட்ட தொ.மு.ச., செயலாளர் துரைசாமி:தற்போது, 99 சதவீத பேச்சுவார்த்தை நிறைவடைந்து விட்டது. மூன்று ஆண்டு ஒப்பந்தத்தை, நான்கு ஆண்டுகளாக நீட்டிக்க வேண்டுமென கேட்டுள்ளனர். அதனை அனுமதிக்க முடியாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அடுத்த பேச்சில் நிச்சயம் நல்ல முடிவு எட்டப்படும்; ஒப்பந்தம் கையெழுத்தாகும். இதுவரை தொழிலாளி எதிர்பார்க்காத புதிய சம்பளம் கட்டாயம் வழங்கப்படும்.மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி., செயலாளர் சண்முகம்:இதுவரை மூன்று ஆண்டுகளாக உள்ள ஒப்பந்த காலத்தை, நான்கு ஆண்டுகளாக மாற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. அரசு தரப்பில் ஒப்பு கொள்ளவில்லை. 'பே மேட்ரிக்ஸ்' சம்பள முறை ஏற்றுக்கொள்ளப்பட்டது வரவேற்கத்தக்கது. முதல்வர், நிதித்துறை அமைச்சர், செயலாளரிடம் பேசி விட்டு ஓய்வூதியதாரர்களுக்கான பணப்பலன் குறித்து முடிவெடுப்பதாக தெரிவித்துள்ளனர். ஓய்வூதியதாரருக்கான டி.ஏ., வழங்கி விட்டு, ஊழியருக்கான சம்பள ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும். ஓய்வூதியதாரர் விஷயத்தில் தமிழக முதல்வர் தலையிட வேண்டும்.ஏ.டி.பி., கிளை செயலாளர் பழனிசாமி :இதற்கு முன் நடந்த பேச்சுவார்த்தையை விட தற்போதைய பேச்சில் உடன்பாடு கையெழுத்திடுவதற்கான சூழல் உருவாகியுள்ளது.தொழிற்சங்கத்தின் குறிப்பிட தகுந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு விட்டு, சம்பள ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். டி.ஏ., அரியர்ஸ் விஷயத்தில் விரைந்து முடிவெடுக்க வேண்டும். அடுத்த கட்ட பேச்சில் இதுகுறித்து கண்டிப்பாக வலியுறுத்தப்படும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!