Load Image
dinamalar telegram
Advertisement

சுதந்திர தின பவள விழா மெல்லோட்டத்தில்...அலைகடலென திரள்வோம்!தேசப்பற்றாளர்களின் குரல் முழங்கட்டும்

Tamil News
ADVERTISEMENT
திருப்பூர்:திருப்பூரில், 'தின மலர்' நாளிதழ் சார்பில், வரும் 14ம் தேதி நடைபெற உள்ள சுதந்திர தின பவள விழா மெல்லோட்டத்தில், பொதுமக்கள் அலைகடலென திரள வேண்டும்; தியாகம் விளைந்த இந்த மண்ணில், தேசப்பற்றின் குரல் முழங்கட்டும்!ஒவ்வொரு இந்தியனின் ரத்தத்தில் கலந்துள்ள தேசப்பற்றையும், சுதந்திர உணர்வையும் வெளிக்காட்ட ஒரு நல்ல வாய்ப்பை, 'தினமலர்' உங்களுக்காக வழங்க காத்திருக்கிறது.தேசப்பற்றை நெஞ்சில் நாளும் தாங்கி வெளியாகும், 'தினமலர்' நாளிதழ் சார்பில், பவளவிழா சுதந்திர தின மெல்லோட்டம் நம்ம திருப்பூரில் நடக்கிறது.நம்மில் இரண்டற கலந்துள்ள நாட்டுப்பற்றை வெளிக்காட்ட, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், பின்னலாடை தொழில் துறையினர், அரசியல் அமைப்பினர், தொழிற்சங்கத்தினர், தன்னார்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், சேவை அமைப்பினர், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் அலுவலர்கள், ஊழியர்கள், குடியிருப்போர் நலச்சங்கத்தினர், அனைத்து வகை வியாபாரிகள் நலச்சங்கத்தினர், நடிகர்களின் ரசிகர் மன்றத்தினர் என, அனைத்து தரப்பினருக்கும் இது ஓர் அரிய வாய்ப்பாக அமையும்.கொடியை நெஞ்சில் தாங்கி, உதிரம் சிந்தி உயிர்நீத்த தியாகி குமரனின் தியாகம் விளைந்த திருப்பூர் மண்ணில் வரும் 14ம் தேதி மெல்லோட்டம், கலெக்டர் அலுவலகத்தில் காலை, 7:00 மணிக்கு துவங்கி, நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைகிறது.அணி அணியாக பங்கேற்று வரலாற்றில் இடம் பிடிக்க அணி திரள்வோம், வாருங்கள்!

வித்தியாசம் காட்டுங்க...!
பங்கேற்கும் அமைப்பினர், பள்ளி மாணவர்கள் தேச தலைவர்கள் வேடமிட்டும், இசைக்கருவிகளை, வாசித்து கொண்டும் வரலாம். இசைக்குழு, பேண்ட் வாத்தியத்துடன், மாணவ, மாணவியர் தங்கள் பள்ளி, கல்லுாரி சீருடையிலும் பங்கேற்கலாம். சிறுவர், சிறுமியர் தேச தலைவர்கள் வேடமணிந்து வரலாம்.தாங்கள் சார்ந்த அமைப்பு அல்லது நிறுவனங்களின் பெயர் தாங்கிய பேனரை கொண்டு வர வேண்டும். குடியிருப்போர் நலச்சங்கத்தினர் உட்பட எந்த அமைப்பினரும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பிக்கலாம். பாரம்பரிய நாட்டுப்புற இசை, நாட்டிய கலைக்குழுகள் தங்கள் கலைகள் மூலமாக தேசப்பற்றை வெளிக்காட்ட விருப்பமா... தாளாரமாக வாங்க!

நாங்க வேற மாதிரி!
எதையும் வித்தியாசமாக செஞ்சுதான் எங்களுக்கு பழக்கம். சுதந்திர தின கருத்துகளைத் தாங்கி, தலைவர்களின் வேடங்களில் உலா வரலாம். முக வர்ணம்(பேஸ் பெயின்டிங்) மூலம் தேசப்பற்றை வலியுறுத்தலாம். அலங்கார ஊர்திகள், புகைப்பட அணிவகுப்புகளுக்கும் அனுமதியுண்டு. இன்னும் ஏகப்பட்ட ஐடியா உள்ளதா? மறக்காமல் அழைத்து பதிவு செய்வது சிறப்பு.

முன்பதிவு செய்ய...!
பள்ளி, கல்லுாரி நிர்வாகத்தினர், அமைப்பினர், தங்கள் அமைப்பின் பெயர், எத்தனை பேர் பங்கேற்கின்றனர், மொபைல் போன், இ-மெயில் ஆகிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். காலை, 9:30 முதல், மாலை, 6:00 மணிக்குள், 98940 09314, 95666 57023 ஆகிய எண்களில் பதிவு செய்யுங்க. பதிவு செய்யப்படும் அமைப்பின் பெயர்கள், 'தினமலர்' நாளிதழில் பிரசுரிக்கப்படும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement