Load Image
dinamalar telegram
Advertisement

சாய ஆலைகள் முதல்வருக்கு மனு

திருப்பூர்:திருப்பூர் சாய ஆலை உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனு:மூலப்பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து விட்டது. வேலையும் குறைந்துள்ளது. இந்நேரத்தில், மின்கட்டணத்தை உயர்த்துவதால், தொழில்துறையினர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழில்களை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும், தமிழக அரசின் முயற்சியும் பயனற்று போகும்.மின் கட்டண உயர்வை மறு பரிசீலனை செய்து, கட்டண உயர்வை கைவிட வேண்டும். திருப்பூர் சாய ஆலைகள், தினமும், 12 கோடி லிட்டர் தண்ணீரை, மறுசுழற்சி முறையில் சுத்திகரித்து சேமித்து பயன்படுத்துகின்றோம்.சுத்திகரிப்பு நிலையங்களில் மொத்த செலவில், 40 முதல், 50 சதவீத செலவு மின்சார கட்டணமாக செலுத்தப்படுகிறது. மின் கட்டணம் உயர்த்தப்பட்டால், சாய ஆலைகளின் உற்பத்தி செலவு கடுமையாக உயரும். தொழில் அபிவிருத்தி செய்ய திட்டமிட்ட தொழில் முனைவோர், மின் கட்டண உயர்வால், முயற்சியை கைவிடும் அபாயம் உள்ளது.தற்போதைய நிலையில், மின் கட்டண உயர்வை சமாளிக்க முடியாது; எனவே, தமிழக முதல்வர் தலையிட்டு, மின் கட்டண உயர்வு முடிவை தவிர்க்க வேண்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement