வி.சி., நிர்வாகி பண மோசடி:புகார் தர போலீசார் அழைப்பு
சேலம்:சேலத்தில் கோடிக்கணக்கில் பண மோசடி செய்ததாக, வி.சி., மாநில நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், பாதிக்கப்பட்டோர் புகார் தர அழைப்பு விடுத்துள்ளனர்.
சேலம், அழகாபுரத்தைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி, 45; இவரது, 'வைஷ்ணவி பில்டர்ஸ் அண்ட் புரமோட்டர்ஸ்' நிறுவனம், சேலம், புது பஸ் ஸ்டாண்ட், சத்யநாராயணா சாலையில் உள்ளது. நிறுவனத்தில் முதலீடு செய்தால், 100 நாளில், இரட்டிப்பு தொகை அல்லது அதற்கு ஈடான வீட்டுமனை வழங்கப்படும் என, 2016ல் அறிவித்தார்.
இதை நம்பி, சேலம், அம்மாபேட்டை, செல்வ நகரைச் சேர்ந்த விஜயகுமார், 39, என்பவர், 8 லட்சத்து, 80 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தார்.தற்போது இவர், சென்னையில் ஐ.டி., நிறுவன மேலாளராக உள்ளார். செலுத்திய தொகை முதிர்வு பெற்றும், பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. இந்நிலையில் நிறுவனமும் மூடப்பட்டது.சேலம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் மார்ச்சில் புகார் அளித்தார்.
விசாரித்த போலீசார், நான்கு பிரிவுகளில், பார்த்தசாரதி மீது வழக்குப்பதிவு செய்தனர். பாதிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்டோர் அளித்த புகார் குறித்தும், விசாரணை நடக்கிறது. இதனால் மோசடி பணம் பல கோடி ரூபாயை தாண்டும் என, போலீசார் தெரிவித்தனர். அத்துடன் பணத்தை பறி கொடுத்தவர்கள் புகார் தர அழைப்பு விடுத்துள்ளனர்.
விஜயகுமார் கூறுகையில், ''பார்த்தசாரதி, வி.சி., கட்சி மாநில வர்த்தகப்பிரிவு செயலராக உள்ளார். கட்சி பதவியை வைத்து மிரட்டி, பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்து விட்டார்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!