ADVERTISEMENT
திருப்பூர்:திருப்பூர் மாவட்ட ஜூனியர் பெண்கள் அணிக்கு, ஏ.வி.பி., கலைக்கல்லுாரியில் கடந்த 1 முதல், 4ம் தேதி வரை நான்கு நாட்கள் கபடி பயிற்சி முகாம் நடந்தது. கல்லுாரி தாளாளர் கார்த்திகேயன் துவக்கி வைத்தார்.திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காட்டில் மாநில ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டி, வரும் 5 முதல், 7ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது. இப்போட்டிக்கு செல்லும் திருப்பூர் மாவட்ட ஜூனியர் அணிக்கான வழியனுப்பு விழா, எஸ்.எஸ்., ஓட்டலில் நடந்தது.மாவட்ட கபடி கழக சேர்மன் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெயசித்ரா சண்முகம், பொருளாளர் ஆறுச்சாமி, துணை சேர்மன் முருகானந்தம், துணைத்தலைவர் ராமதாஸ், 35வது வார்டு கவுன்சிலர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, நடுவர் குழு தலைவர் முத்துசாமி வரவேற்றார். விளையாட்டு உபகரணங்களை செயலாளர் ஜெயசித்ரா சண்முகம் வழங்கினார். இணை செயலாளர் வாலீசன் நன்றி கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!