Load Image
dinamalar telegram
Advertisement

அரிவாள் வெட்டு: 4 பேர் கைது


மானாமதுரை : மானாமதுரை அருகே டூவீலரில் வேகமாக சென்றதை தட்டி கேட்டவர்களை அரிவாளால் வெட்டியதில் 3பேர் காயமடைந்தனர். மானாமதுரை போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர்.மானாமதுரை வின்சென்ட் நகர் பகுதியை சேர்ந்த சேது மகன் காளீஸ்வரன் 47,


இவர் அப்பகுதியில் நின்று கொண்டிருந்தபோது அந்த வழியாக டூவீலரில் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய ஒருவர் டூவீலரில் வேகமாக சென்றார். காளீஸ்வரன் அந்தநபரிடம் ஏன் டூவீலரில் வேகமாக செல்கிறாய் என கேட்டுஉள்ளார். அந்த நபர் தனது நண்பர்களான வின்சென்ட் நகர் துரைசிங்கம்19,தெ.புதுக்கோட்டை பகுதியைசேர்ந்த 17 வயதுடைய நபர் ஒருவர்,தெளிச்சாத்தநல்லூர் சிவா 22, ஆகியோருடன் சென்று காளீஸ்வரனை அரிவாளால் வெட்டியுள்ளனர்.

இதனை தடுக்க வந்த வின்சென்ட் நகர் பகுதியைசேர்ந்த ராசு மகன் முருகன்57, முனியராஜ் மனைவி மகாலட்சுமி ஆகிய 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது. மானாமதுரை போலீசில் காளீஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நான்கு பேரையும் கைது செய்து ரிமான்டிற்கு அனுப்பினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement