Load Image
dinamalar telegram
Advertisement

ஒளிந்து கொள்ளும் தனியார் பேருந்துகளால் அவதி


சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் குறிப்பிட்ட நாள், நேரங்களில் ஒளிந்து கொள்ளும் தனியார் பேருந்துகளால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.இங்கிருந்து மேலூர், திருப்புத்தூர் பகுதிகளுக்கு அரசு தனியார் டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

வரையறுக்கப்பட்ட வழித்தடத்தில் குறிப்பிட்ட நேரங்களில் இப்பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் சில மாதங்களாக ஒரு சில தனியார்பேருந்துகள்பயணிகளை ஏற்றிச் செல்லாமல் ஒளிந்து கொள்கின்றன. குறிப்பாக சிங்கம்புணரியில் இருந்து முறையூர் வழியாக திருப்புத்தூருக்கு இயக்கப்படும் பஸ் சனி, ஞாயிறு இயக்கப்படுவது இல்லை.


இவ்வழித்தடத்தில் உள்ள கிராம மக்கள் ஊர்களுக்குசெல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.மேலூரிலிருந்து பிரான்மலைக்கு இயக்கப்படும் பஸ் சில டிரிப்களை நிறுத்திவிட்டு ஓய்வெடுத்து விடுகின்றது. இதனால் புறநகர் பஸ்களில் அதிகம் கட்டணம் கொடுத்து செல்ல வேண்டியுள்ளது.


வாரத்தின் ஏழு நாட்களும் இயக்குவதாக அனுமதி பெற்று விட்டு பயணிகளின் எண்ணிக்கை வசூலுக்கு ஏற்றார் போல் பேருந்துகளை, நிறுத்தி இயக்குவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே அனைத்து அரசு தனியார் டவுன் பஸ்களும் ஒதுக்கப்பட்ட வழித்தடத்தில் உரிய நேரத்தில் வந்து செல்ல மாவட்ட நிர்வாகம்நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement