Load Image
dinamalar telegram
Advertisement

உண்டியல் பணம் திருட்டுகோவில் ஊழியர் சிக்கினார்

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் உண்டியல் பணத்தை திருடிய, பெண் துப்புரவு ஊழியர், அவரது கணவர் கைது செய்யப்பட்டனர்.
ராமேஸ்வரம் கோவில் திருமண மண்டபத்தில், ஆக., 4ல் உண்டியல் காணிக்கையை ஊழியர்கள் எண்ணினர். துப்புரவு ஊழியர் மீனாட்சி, 32, ஆயிரம் ரூபாய் நாணயங்கள் அடங்கிய ஒரு பாக்கெட்டை திருடி, தெற்குவாசலில் காத்திருந்த கணவர் கணேசன், 42, என்பவரிடம் வழங்கினார்.
அவர் ஒரு கடையில் நாணயங்களை கொடுத்து பணம் கேட்டுள்ளார். விஸ்வ ஹிந்து பரிஷத் தென் மண்டல அமைப்பாளர் சரவணன் இதை புகைப்படம் எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.கோவில் மேலாளர் மாரியப்பன் புகாரில், உண்டியல் பணத்தை திருடிய இருவரையும், போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கேமரா கண்காணிப்பில் உண்டியல் பணம் எண்ணப்பட்ட நிலையிலும், இந்த திருட்டு சம்பவம் நடந்தது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement