Load Image
dinamalar telegram
Advertisement

இந்திய கம்யூ., மாநில மாநாடு துவங்கியது

Tamil News
ADVERTISEMENT
திருப்பூர்:இந்திய கம்யூ., கட்சியின் 25வது மாநில மாநாடு திருப்பூரில் நேற்று துவங்கியது. நான்கு நாள் நடக்கும் இந்த மாநாடு, வரும் 9ம் தேதி, பொதுக்கூட்டம் மற்றும் பேரணியுடன் நிறைவடைகிறது.இந்திய கம்யூ., கட்சியின், 25வது மாநில மாநாடு நேற்று திருப்பூர் வித்யா கார்த்திக் மண்டபத்தில் துவங்கியது. நேற்று முதல் நாள் நிகழ்ச்சியாக முன்னதாக பிரதிநிதிகள் பதிவு செய்தல், மன்னார்குடியிலிருந்து கொண்டு வரப்பட்ட செங்கொடிக்கு வரவேற்பு மற்றும் தியாகச் சுடர் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார். மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் காளியப்பன் தியாக சுடரை பெற்று கொண்டார். தொடர்ந்து நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டில் தலைமைக்குழு தேர்வு நடைபெற்றது.கட்சியின் பொது செயலாளர் ராஜா துவக்கி வைத்து பேசினார். இதில் அமர்ஜீத் கவுர், நாராயணா, பினாய் விஸ்வம், ஆனி ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர்.மாலை, சமூக நல்லிணக்க பாதுகாப்பு மற்றும் மாநில உரிமைகள் மீட்பு எழுச்சி மாநாடு நடைபெற்றது. எம்.பி., சுப்பராயன் வரவேற்றார். முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக சிறப்புரை ஆற்றினார். அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.மாநில காங்., தலைவர் அழகிரி, எம்.பி., திருமாவளவன், எம்.எல்.ஏ.,க்கள் ஈஸ்வரன், வேல்முருகன், ஜவாஹிருல்லா, மா.கம்யூ., மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இ.கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன், புதுச்சேரி மாநில செயலாளர் சலீம், இ.யூ.மு.லீக் தலைவர் காதர் மொய்தீன், இந்திய கம்யூ., நிர்வாகிகள் மகேந்திரன், வீரபாண்டியன், ஆறுமுகம் பேசினர். வரவேற்பு குழு செயலாளர் ரவி நன்றி கூறினார்.மாநாட்டின், 2வது நாளான இன்று அறிக்கை மீதான விவாதம் மற்றும் கருத்தரங்கம் நடக்கிறது. நாளை, அறிக்கைகள் மீதான தொகுப்புரை, கணக்கு தணிக்கை அறிக்கை, கட்டுப்பாட்டு குழு அறிக்கை, மாநிலக்குழு தேர்வும், மாலையில், புதிய மாநில குழு கூட்டம், தேசிய மாநாட்டு பிரதிநிதிகள் தேர்வு, மாநாட்டு நிறைவுரை, மாநாட்டு தீர்மானம் நிறைவேற்றுதல் ஆகியன நடைபெறும்.வரும் 9ம் தேதி, மாலை 3:00 மணிக்கு யூனியன் மில் ரோட்டிலிருந்து பேரணி யும், பத்மினி கார்டன் மைதானத்தில் பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement