கோடநாடு வழக்கு: மருது அழகுராஜிடம் விசாரணை
கோவை:கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக, 'நமது அம்மா' நாளிதழ் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜிடம், நேற்று தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில், 2017ல் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தன. இவ்வழக்கு சம்பந்தமாக, ஜெ., தோழி சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி என, 200க்கும் மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், 'நமது அம்மா' நாளிதழ் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ், ஐ.ஜி., சுதாகர் முன்னிலையில், கோவையில் நேற்று விசாரணைக்கு ஆஜரானார். அதிகாரிகள் குழுவினர், ஐந்து மணி நேரத்துக்கும் மேல் அவரிடம் விசாரணை நடத்தினர்.
அ.தி.மு.க.,வில், பழனிசாமி - பன்னீர்செல்வம் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக மருது அழகுராஜ் செயல்பட்டு வருகிறார்.கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக, பழனிசாமி மீது குற்றஞ் சாட்டும் வகையில், மருது அழகுராஜ் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, அவரை போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
மருது அழகுராஜ் கூறியதாவது:கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக நான் செய்தியாளர்களிடம் தெரிவித்த கருத்துகள் அடிப்படையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டு உள்ளேன். சமீபத்தில் இவ்வழக்கு தொடர்பாக புலனாய்வு அறிக்கை ஒன்று, ஊடகத்தில் வெளியானது. அதில் முன்னாள் முதல்வர் பழனிசாமியின் வலதும், இடதுமாக இருந்து வரும் சேலம் இளங்கோவனுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது.
அதன் அடிப்படையில் சில சந்தேகங்களை எழுப்பி, எனது கருத்துகளை தெரிவித்திருந்தேன். அதனால் என்னை விசாரணைக்கு அழைத்திருக்கலாம். நானும், பூங்குன்றனும், ஜெ.,வின் நம்பிக்கைக்கு உரிய ஊழியர்கள். அந்த அடிப்படையிலும் அழைத்திருக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!