Load Image
dinamalar telegram
Advertisement

பிலிப்பைன்ஸ் அதிபருடன்பிரதமர் மோடி பேச்சு

புதுடில்லி:பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ப்ரெடினன்ட் மார்கோஸ் ஜூனியருடன், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக உரையாடினார்.

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் அதிபராக, ப்ரெடினன்ட் மார்கோஸ் ஜூனியர் கடந்த ஜூன் மாதம் பொறுப்பேற்றார். புதிய அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக உரையாடினார்.

இந்த உரையாடல் குறித்து பிரதமர் வெளியிட்ட சமூகவலைதள பதிவு:பிலிப்பைன்ஸ் அதிபர் ப்ரெடினன்ட் மார்கோஸ் ஜூனியருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்தேன். இந்தியா - பிலிபைன்ஸ் உறவை மேலும் வலுப்படுத்த அவருடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாக தெரிவித்தேன். அந்நாட்டின் வளர்ச்சிக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு தரும் என அவருக்கு உறுதி அளித்தேன். மேலும், இந்தோ - -பசிபிக் பிராந்தியத்திற்கான இந்தியாவின் கொள்கையில் பிலிப்பைன்ஸ் வகிக்கும் முக்கிய பங்கை எடுத்துரைத்தேன்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement