டில்லியில் பழனிசாமி கோஷ்டி தீவிரம்
புதுடில்லி: அ.தி.மு.க.,வில் ஒற்றை தலைமை பிரச்னையால், அக்கட்சி இரண்டு பட்டு நிற்கிறது. பன்னீர்செல்வம் ஆட்களை பழனிசாமி நீக்க, பதிலுக்கு பழனிசாமி ஆட்களை பன்னீர் செல்வம் நீக்கி வருகிறார். இந்த மோதலால் அ.தி.மு.க.,வின் உண்மை தொண்டர்கள் விரக்தியில் உள்ளனர்.
இதற்கிடையே 'லோக்சபா எம்.பி.,யாக உள்ள பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத், அ.தி.மு.க., அணியில் இல்லை; அவரை தன்னிச்சையான எம்.பி.,யாக அறிவிக்க வேண்டும்' எனக் கோரி சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு கடிதம் எழுதியிருந்தார் பழனிசாமி. ஆனால், இந்த கடிதத்தின் மீது இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
முன்னாள் துணை சபாநாயகரான தம்பிதுரை, பழனிசாமி கோஷ்டியில் இருக்கிறார். ராஜ்யசபா எம்.பி.,யாக இருக்கும் இவர், பார்லிமென்ட் விதிமுறைகளை நன்கு அறிந்தவர். இவர் பா.ஜ., தலைவர்களை சந்தித்து ரவீந்திரநாத் விவகாரத்தில், பழனிசாமிக்கு சாதகமான முடிவை எடுக்க வற்புறுத்தி வருகிறார். இதற்காக, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவை பல முறை சந்தித்து, 'ரவீந்திரநாத்தை தன்னிச்சையான எம்.பி.,யாக அறிவியுங்கள்' என வற்புறுத்தி வருகிறார்.
ஆனால், சபாநாயகர் எந்த முடிவும் எடுக்காமல் அமைதியாக இருக்கிறார். ரவீந்திரநாத்தை தன்னிச்சையான எம்.பி., என சபாநாயகரால் அறிவித்தால், அவர் எந்த ஒரு கட்சியிலும் சேர முடியாது. அப்படி சேர்ந்தால், அவர் சட்டப்படி எம்.பி., பதவியை இழக்க நேரிடும். இதனால் தான் பழனிசாமி அவசரம் காட்டுகிறார் எனக் கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
இந்த தம்பி துறை ஒரு நன்றி கெட பண்ணி துறை. அடுத்தவர் காலில் விழும்போது எல்லாம் தெரியாத துரோகி. இதோ இன்னும் விரைவில் எத்தனை எம்.பி.க்கள் எம்.எல்.எ.க்கள் ஓடி வரப்போகிறார்கள் என்று தெரியும். இதில் இந்த தம்பி துறையும் ஒன்று.