இரட்டை குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை
சேலம்:கொங்கணாபுரம் அருகே இரு பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று, தாயும் தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அருகே, எருமப்பட்டி, பாலப்பட்டியைச் சேர்ந்தவர் சபரி, 34; பஞ்சு மில் தொழிலாளி. இவரது மனைவி சரளா, 28; இவர்களது மகன் சர்வேஷ், 7; சரளாவுக்கு கடந்த மாதம் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. குறை பிரசவத்தில் பிறந்ததால், குறைந்த எடையுடன் ஆரோக்கியமின்றி இருந்தன.
மன உளைச்சலுக்கு ஆளான சரளா, அருகிலுள்ள ஒரு விவசாய கிணற்றில், இரு பெண் குழந்தைகளையும் வீசி கொன்றுவிட்டு, தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இடைப்பாடி தீயணைப்பு துறையினர், சரளா மற்றும் குழந்தைகள் உடலை மீட்டனர். கொங்கணாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!