மழை எச்சரிக்கை தகவல் அமைச்சர் அறிவுரை
சென்னை:'அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் வழங்கும் முன்னெச்சரிக்கை செய்திகளை, பொது மக்கள் கூர்ந்து கவனித்து செயல்பட வேண்டும்' என, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:தென் மேற்கு பருவ மழை காலத்தில், ஜூன் 1 முதல் ஆக., 5 வரை, 26.6 செ.மீ., மழை பெய்துள்ளது. இது, இயல்பான மழை அளவை காட்டிலும், 104 சதவீதம் அதிகம். கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி, கோவை, தேனி, திருப்பத்துார், கிருஷ்ணகிரியில் அதிக மழை பெய்து உள்ளது.
நீலகிரி மாவட்டம், அவலாஞ்சியில் 32.3 செ.மீ., மழை பெய்துள்ளது. மழையால் மனித உயிரிழப்புகள் இல்லை. தர்மபுரி, நீலகிரி மாவட்டங்களில் தலா ஒரு மாடு, புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு செம்மறியாடு என, இழப்பு ஏற்பட்டுள்ளது. அரியலுார், கோவை, தர்மபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, மதுரை, ராணிப்பேட்டை, சேலம், நீலகிரி, தேனி, துாத்துக்குடி மாவட்டங்களில் 23 குடிகைள், 11 வீடுகள் பகுதி அளவிலும் சேதம் அடைந்துள்ளன.
ஈரோடு, கரூர், மயிலாடுதுறை, நாமக்கல், தஞ்சாவூர், திருச்சி, தர்மபுரி, நீலகிரி, கடலுார் ஆகிய ஒன்பது மாவட்டங்களில், 53 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு, 6,109 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் மணிக்கு, 45 முதல் 50 கி.மீ., வரை, பலத்த காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என, இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்த எச்சரிக்கை செய்தியை, மீன் வளத் துறை வாயிலாக அனைத்து மீனவர்களுக்கும் தெரிவித்து உள்ளோம்.பேரிடர் தொடர்பான தகவல்களை துறை அலுவலர்களுக்கும், பொது மக்களுக்கும் தெரிவிக்கும் வகையில், மாநில அவசர கட்டுப்பாட்டு மையம், மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையங்கள், 24 மணி நேரம் செயல்பட்டு வருகின்றன.
கன மழையால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு, மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் வாயிலாக வழங்கப்படும் முன்னெச்சரிக்கை செய்திகளை, பொது மக்கள் கூர்ந்து கவனித்து செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!