சென்னையில் இன்று :மழை வரலாம்
சென்னை:சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புஉள்ளதாக, மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல், தென்காசி, தேனி, புதுச்சேரி, காரைக்கால் பகுதி களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யக்கூடும்.சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒரு சில பகுதிகளில்,மிதமான மழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம், அவலாஞ்சியில் 32 செ.மீ., மழையும், மேல்பவானியில் 20 செ.மீ.,மழையும் பெய்துள்ளது.கர்நாடக கடலோர பகுதிகள், அதை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகள்; ஆந்திர கடலோர பகுதிகள், அதை ஒட்டிய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், பலத்த மற்றும் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் வீசும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!