மெக்கானிக் தற்கொலை: எஸ்.ஐ.,யிடம் விசாரணை
மதுரை:புகார் கொடுக்க சென்ற பெண்ணிடம், தொடர்ந்து போனில் பேசி வந்த எஸ்.ஐ.,யால், அப்பெண்ணின் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை, எச்.எம்.எஸ்., காலனியைச் சேர்ந்தவர் கணேசன், 35; கார் மெக்கானிக். காதல் திருமணம் செய்து கொண்ட இவருக்கு, 7 வயதில் மகள் உள்ளார். கணவருடனான தகராறால், மனைவி பெற்றோர் வீட்டில் வசிக்கும் நிலையில், இரு நாட்களுக்கு முன் கணேசன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின்னணியில் உளவுத்துறை எஸ்.ஐ., இருப்பதாக, கணேசன் உறவினர்கள் குற்றம் சாட்டியதால், துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது. சர்ச்சைக்குரிய எஸ்.ஐ., முன்பு எஸ்.எஸ்.காலனி ஸ்டேஷனில் பணிபுரிந்தார். அப்போது, புகார் கொடுக்க சென்ற கணேசனின் மனைவியுடன், எஸ்.ஐ.,க்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து இருவரும் போனில் பேசி வந்துள்ளார். இதை, கணேசன் தட்டிக் கேட்டுள்ளார். கணேசனும், எஸ்.ஐ.,யும் பேசிக் கொண்ட ஆடியோ வாயிலாக இந்த விவகாரம் தெரியவந்தது. இது குறித்து, எஸ்.ஐ.,யிடம் விசாரணை நடந்து வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!