ADVERTISEMENT
சிங்கம்புணரி : சிங்கம்புணரி நீர்நிலைகளில் நிரம்பி வழியும் பாலிதீன் குப்பைகளால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.இவ்வொன்றியத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சி ஒன்றியநிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் ஏராளமான கண்மாய், குளங்கள் உள்ளன. ஜமீன் கண்மாய்களும் இப்பகுதியில் உள்ளன.நகர் மற்றும் குடியிருப்பு பகுதிகளை ஒட்டிய நீர்நிலைகள் பாலிதீன் குப்பைகளால் நிரம்பி வழிகின்றன.
வரத்துக் கால்வாய்களில் ஆங்காங்கே கொட்டப்படும் குப்பை மழைக்காலங்களில் அடித்து வரப்பட்டு கண்மாய்களுக்குள் தேங்கிவிடுகிறது. இதனால் கண்மாய் மதகுகள் அடைபட்டு வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்படுகிறது. சில நேரங்களில் பாலிதீன் குப்பை வயல்வெளிக்குள் பரவி நிலத்தை மாசு படுத்தி விடுகிறது.
இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே நீர்நிலைகள், வரத்துகால்வாய்களில் பாலிதீன் குப்பை தேங்காதவாறு பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
இவனுங்க தான் இயற்கையை காப்பாத்த போரவனுங்க.