Load Image
dinamalar telegram
Advertisement

கீழடி அகழாய்வு தளம்; பார்வையாளர்கள் ஏமாற்றம்

திருப்புவனம் : கீழடி திறந்த வெளி அருங்காட்சியகத்தை காண தினசரி பல்வேறு நாடுகளில் இருந்து பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். 7ம் கட்ட அகழாய்வு நடந்த எட்டு குழிகளையும் பார்வையாளர்கள் கண்டு ரசிக்க ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளது.


குழிகளினுள் மீன் உருவம் பதித்த உறைகிணறு, தொட்டி போன்ற உறைகிணறு, சிவப்பு நிற பானை உள்ளிட்டவற்றை தொல்லியல் துறையினர்பாதுகாப்பாக மூடி வைத்துள்ளனர். அகழாய்வில் எடுக்கப்பட்ட பொருட்களும் இங்கு இல்லை. பொருட்கள் குறித்த பிளக்ஸ் பேனர்களும் காற்றில் சேதமடைந்துஉள்ளன.


ஆர்வத்துடன் வரும் பார்வையாளர்களை எந்த பொருட்களையும் காண முடியாமல் ஏமாற்றத்திற்குஉள்ளாகின்றனர். எனவே திறந்த வெளி அருங்காட்சியகத்தில் பொருட்களை காணும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என பார்வையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement