ADVERTISEMENT
திருப்பூர், அனுப்பர்பாளையம்புதுாரை சேர்ந்த மகேஷ்குமார் - ரேகா தம்பதி மகள் சஷ்டிகா; லிட்டில் கிங்டம் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கிறார். ஊரடங்கு நேரத்தில், பொழுதுபோக்குக்காக இவர் விளையாடிய 'ஹூலா ஹூப்' விளையாட்டு இன்று பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.
ஒரு வளையம்.. உடலின் பல பாகங்களில் சுழலும் கலைக்குத்தான் 'ஹூலா ஹூப்'. ஜிம்னாஸ்டிக் கலையின் உட்பிரிவு இது. உடலின் இடுப்பு, கை, கால், மணிக்கட்டு, கால் முட்டி, பாதம், தோள்பட்டை ஆகிய பகுதிகளில் வளையத்தை மாட்டி சுற்றலாம். ஒலிம்பிக் போட்டியிலும் ஜிம்னாஸ்டிக் பிரிவிலும் இவ்வகை போட்டிகள் நடத்தப்படுகின்றன.சிறந்த பயிற்சியின்றி வளையத்தை சுற்றுவது என்பது சாதாரண காரியம் இல்லை. உடலின் எல்லா பாகங்களும் அசைந்து கொடுத்தால் மட்டுமே வளையம் தொடர்ச்சியாக சுழலும். முப்பது நிமிடம் நடைபயிற்சியில் கிடைக்கும் உடல்நல பலன்கள் இதில், 10 நிமிடத்தில் பெற முடியும். இதை சர்வசாதாரணமாக செய்து குறுகிய காலத்தில் சாதித்துள்ளார், சஷ்டிகா.ஊரடங்கின் போது வீட்டுக்குள்ளேயே விளையாடிட்டு இருந்தேன். அப்பா, அம்மா 'ஹூலா ஹூப்' வாங்கி கொடுத்தாங்க. வீடியோ பார்த்து நானே சுற்றிப்பழகினேன். ஒரே நேரத்தில் குறைந்த நேரத்தில் அதிகமுறை என்னால் சுழற்ற முடிந்தது. இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் முயற்சி பண்ணலாம்னு பிராக்டிஸ் எடுத்தேன்.ஒரு நிமிடத்தில், 248 முறை முழங்கால்களில் வளையத்தை சுழற்றியது சாதனையாக அமைந்தது. இதனை அங்கீகரிக்கும் விதமாக, சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கவுரவித்தினர். அடுத்து கின்னஸில் இடம்பெற வேண்டும் என்பதே லட்சியம்' என்ற மழலை மாறா குரலில் சொன்ன சஷ்டிகா, படிப்பிலும் படுசுட்டியாம்!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!