ADVERTISEMENT
கொசுத்தொல்லையில் இருந்து தப்பிக்க, நொச்சி மரம் வளர்ப்பு, கம்பூசியா மீன் வளர்ப்பு போன்றவற்றை உள்ளாட்சி நிர்வாகங்கள் ஊக்குவிக்கின்றன.
சாதாரண காய்ச்சல் துவங்கி டைபாய்டு, மலேரியா, டெங்கு என உயிர் கொல்லி நோய்க்கு, கொசுக்கள் முக்கிய காரணமாக உள்ளன. வெயில், மழைக்காலம் என, அந்தந்த காலத்துக்கேற்ப உருவாகும் கொசுக்கள், அந்தந்த சீதோஷ்ண நிலை சார்ந்த நோய்களை பரப்பிவிடுகின்றன.உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில், வீதி, தெருக்கள் தோறும் கொசு மருந்து தெளிக்கப்படுகிறது; கொசு ஒழிப்பு பணியாளர்கள் மூலம், வீடு, வீடாக கள ஆய்வு மேற்கொண்டு, கொசு உற்பத்தி ஏற்படும் வகையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளதா என, ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும், கொசுக்களை முற்றிலும் ஒழிப்பது என்பது, இயலாத காரியமாகவே உள்ளது.இயற்கை வழியில் கொசு விரட்ட, உள்ளாட்சி நிர்வாகங்கள் திட்டமிட்டுள்ளன; அதன்படி, கொசு விரட்டியாக செயல்படும் நொச்சி மரங்களை வீடுகளை சுற்றி வளர்க்க வேண்டும் என ஊக்குவிப்பு வழங்கப்படுகிறது. அதனடிப்படையில் தான், அரசின் சார்பில் கட்டி தரப்படும்தொகுப்பு வீடுகளின் பயனாளிகளுக்கும், தலா, 2 நொச்சி மரங்கள் வழங்கப்படுகின்றன. இருப்பினும், இதுகுறித்த விழிப்புணர்வு, மக்கள் மத்தியில் ஏற்படவில்லை.குளம், குட்டைகளில், கொசுப்புழுக்கள் உருவாவதை தவிர்க்க, கொசுப்புழு முட்டைகளை உணவாக்கிக் கொள்ளும் கம்பூசியா மீன்கள் வளர்க்கப்பட்டு, வீடுகளில் உள்ள குளம், குட்டைகளில் விடுவதற்கான விழிப்புணர்வை, அவிநாசி பேரூராட்சி உள்ளிட்ட சில உள்ளாட்சி நிர்வாகங்கள் ஏற்படுத்தி வருகின்றன.மரவியல் ஆர்வலர் ஆனந்த் கூறுகையில்,“ பொதுவாக நொச்சி மரத்தில் இருந்து வெளியேறும் வாசனை, கொசு உள்ளிட்ட பூச்சியினங்களை அண்ட விடுவதில்லை. அதற்காக ஒட்டு மொத்த கொசுக்களும் நொச்சி மரங்களை வளர்ப்பதால் அழிந்து விடும் என நம்புவது, ஏற்புடையதல்ல," என்றார்.இயற்கை வழியிலான கொசு ஒழிப்பு முறை ஒருபுறம் இருந்தாலும், வீடுகளில் வசிப்போர், கொசு உற்பத்திக்கு வழிவகை ஏற்படுத்தாத வகையில் தங்கள் சுற்றுப்புறத்தை பராமரிக்க வேண்டும் என்பதே யதார்த்தம்.-----கம்பூசியா மீன்-----அவிநாசி 'வளம்' மீட்பு பூங்காவில் வளர்ந்துள்ள நொச்சி மரம்

அழிந்த உயிரினம்
வளர்ந்த கொசுவினம்-------திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் கூறியதாவது;கடந்த காலங்களில், எங்கெல்லாம் நீர் தேங்கியிருந்ததோ, அங்கு தலைப்பிரட்டைகள் இருந்தன; அவை, கொசு முட்டைகளை உணவாக்கியதால், கொசு உற்பத்தி கட்டுக்குள் இருந்தது. அதேபோன்று, தட்டான் பூச்சிகளும் முந்தைய நாட்களில் அதிகளவில் இருந்தன; அவையும் கொசு முட்டைகளை உண்டு, கொசுக்களுக்கு எமனாக இருந்தன. மாலை நேரங்களில் வீடுகளை ஒட்டியுள்ள மரங்களுக்கு கூட்டம், கூட்டமாக வரும் சிறிய வவ்வால்கள், பறந்து செல்லும் நிலையிலேயே 30, 40 கொசுக்களை உணவாக்கிக் கொள்ளும். ஆக, மாறிவிட்ட உட்கட்டமைப்பில் தவளை உள்ளிட்ட இதுபோன்ற உயிரினங்களும் இல்லாமல் ஆகிவிட்டன. அதனால், கொசு இனம் வளர்ந்துவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!