Load Image
dinamalar telegram
Advertisement

எல்.ஆர்.ஜி., கல்லுாரியில்நாளை கவுன்சிலிங்

திருப்பூர்:திருப்பூர் எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கலைக்கல்லுாரி இளநிலை பட்டப்படிப்புக்கான மாணவியர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நாளை (8ம் தேதி) துவங்குகிறது.முதல் நாளன்று முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டில் சிறப்புத்தகுதி, தேசிய மாணவர் படையில் சிறப்பு தகுதி உள்ளவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கும்.வரும் 10, 11ம் தேதி வணிகவியல், கணினி பயன்பாட்டியல், வணிக நிர்வாகவியல் பாடப்பிரிவுகள், வரும் 12, 13ல் வரலாறு மற்றும் பொருளியல் பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது. வரும் 16, 17, 18ம் தேதிகளில் கணினி அறிவியல், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் கணினி பயன்பாட்டியல், விலங்கியல், தாவரவியல், நுண்ணுயிரியல், உணவுஅறிவியல் மற்றும் ஊட்டசத்தியல், மின்னணுவியல், வரும் 22, 23ம் தேதிகளில் தமிழ், ஆங்கிலம் இலக்கியம் பாடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடக்கிறது.கல்லுாரியில் சேர விரும்பும் மாணவியர், அசல் சான்றிதழ்களுடன் கவுன்சிலிங் நாளன்று காலை 9:00 மணிக்குள் வர வேண்டும் என, கல்லுாரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement