காற்றாலையில் கைவரிசை:4 வாலிபர்கள் கைது
பொங்கலுார்:பல்லடம் அருகே கேத்தனுாரில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலையில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் காப்பர் கம்பி திருட்டு போனது. இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட காமநாயக்கன்பாளையம் போலீசார் அதே ஊரை சேர்ந்த கவியரசு, 25, தீபக், 25, தனபால், 25, சதீஷ், 25 ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.இவர்களில், தீபக் ஏற்கனவே ஒரு காற்றாலையில் வேலை செய்தவர்; மற்ற மூவரும் தனியார் மில்லில் வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது.கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமிருந்து, பத்து கிலோ காப்பர் கம்பி, 50 கிலோ கோர் பிளேட், 45 ஆயிரம் ரூபாய்பணம், இரண்டு பைக் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!