Load Image
dinamalar telegram
Advertisement

நீதிமன்றத்தில் ஆஜராகாத நடிகைக்கு பிடிவாரன்ட்

சென்னை:நடிகை மீரா மிதுனுக்கு, 'பிடிவாரன்ட்' பிறப்பித்து, சென்னை முதன்மை செஷன்ஸ்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சினிமா துறையில் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் முன்னேற்றம் குறித்து, சமூக வலைதளங்களில் அவதுாறு கருத்துக்களை தெரிவித்ததாக, நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோருக்கு எதிராக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.இவ்வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டு, பின் ஜாமினில் வந்தனர். இவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கு, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில், விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், சிறப்பு வழக்கறிஞர் எம்.சுதாகர் ஆஜரானார். குற்றம் சாட்டப்பட்ட நடிகை மீரா மிதுன் ஆஜராக வில்லை; அவரது நண்பர் சாம்அபிஷேக் ஆஜரானார்.சாட்சி விசாரணை தினத்தில், குற்றம் சாட்டப்பட்டவர் ஆஜராகாதது, நீதிமன்றத்தை ஏமாற்றுவதாக உள்ளது எனக் கூறி, நடிகைக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்து, நீதிபதி அல்லி உத்தரவிட்டார். விசாரணையை, வரும் 29க்கு தள்ளிவைத்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement