கண்டன ஆர்ப்பாட்டம்
கோவை:பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மின்கட்டணம், குடிநீர் கட்டணம், சொத்துவரி, வீட்டுவரி, சிலிண்டர் விலை உயர்வு ஆகியவற்றை குறைக்க வலியுறுத்தியும், அத்தியாவசிய பொருட்களின் மீது சுமத்தப்பட்டுள்ள ஜி.எஸ்.டி.,யை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், மதசார்பற்ற ஜனதாதளத்தினர் சார்பில் நேற்று கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மதசார்பற்ற ஜனதாதள தலைவர் பொன்னுசாமி தலைமை வகித்தார். மாநகர தலைவர் ஜெகன்நாதன், புறநகர் தலைவர் பாப்பண்ணன், திருப்பூர் மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியம், துணைதலைவர்கள் ராமச்சந்திரன், தில்லை ஜெகன், மாவட்ட செயலாளர்கள் செல்வராஜ், பால்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!