Load Image
dinamalar telegram
Advertisement

விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம்

சென்னை:ரயில் பாதை பாமரிப்பு பணி காரணமாக, சென்னை சென்ட்ரல் - மைசூரு உள்ளிட்ட ஐந்து விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: காட்பாடி - ஜோலார்பேட்டை இடையே ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. இதனால், இந்த தடத்தில் செல்லும் சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* சென்னை சென்ட்ரல் - கர்நாடகா மாநிலம், மங்களூரு செல்லும் விரைவு ரயில், வரும் 8, 9, 13, 15, 16, 20, 23, 27, 29, 30; செப்டம்பர் 3, 5, 6ம் தேதிகளில் 40 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்

* சென்ட்ரல் - மைசூரு விரைவு ரயில், வரும் 8, 9, 13, 15, 16, 20, 22, 23, 27, 29, 30; செப்டம்பர் 3, 5, 6ம் தேதிகளில், 30 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் சென்ட்ரல் - மேற்கு வங்கம், ஹவுரா செல்லும் விரைவு ரயில், வரும் 20ம் தேதி மட்டும், ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு செல்லும்

* கேரள மாநிலம், திருவனந்தபுரம் - தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத் செல்லும் விரைவு ரயில், வரும் 8 முதல் செப்டம்பர் 7ம் தேதி வரையில், ஞாயிறுகளை தவிர, மற்ற நாட்களில், மூன்றரை மணி நேரம் தாமதமாக புறப்படும்

* நாகர்கோவில் - தெலுங்கானா மாநிலம், காச்சிகுடா செல்லும் வாராந்திர விரைவு ரயில், வரும் 13, 20, 27 செப்டம்பர் 3ம் தேதிகளில், மூன்று மணி நேரம் தாமதமாக புறப்பட்டு செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement