புதுடில்லி: சமீபத்தில் லோக்சபாவில் நடந்த விவாதத்தின் போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனக் குறிப்பிட்டார். அதோடு 'ஆவின் பொருட்களை கூடுதலாக லாபம் வைத்து விற்பனை செய்யும் தமிழக அரசு, விலை உயர்விற்கு மத்திய அரசு காரணம் என சாக்கு சொல்கிறது' என குற்றம் சாட்டி தமிழில் பேசினார்.
இதற்கு பதில் அளிக்க முடியாத தி.மு.க., - எம்.பி.,க்கள், காங்கிரசோடு சேர்ந்து வெளிநடப்பு செய்தனர். இது குறித்து சமூக வலைதளங்களில் தி.மு.க.,விற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மிகவும் கோபமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
அவர் தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு போன் செய்து, 'எதற்கு வெளிநடப்பு செய்தீர்கள்; அப்படியே வெளிநடப்பு செய்தாலும், அதற்கு முன்பாக நிதியமைச்சர் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லிவிட்டு செய்திருக்க வேண்டும்' என கடுமையாக பேசியதாக சொல்லப்படுகிறது.தி.மு.க., - எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்ய எழுந்திருக்கையில், முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பி.,யுமான பழனி மாணிக்கம், அவர்களை அமருங்கள் என தமிழில் சொல்கிறார்.
ஆனால், அவருடைய பேச்சைக் கேட்காமல் தி.மு.க.,வினர் வெளிநடப்பு செய்கின்றனர். இது பார்லி., 'டிவி'யில் பதிவாகியுள்ளது.நிர்மலா சீதாராமன் இப்படி பேசுவார் என தி.மு.க., - எம்.பி.,க்கள் எதிர்பார்க்கவில்லை. இதற்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் தான் வெளிநடப்பு செய்தனர் எனவும் சொல்லப்படுகிறது.லோக்சபாவில் தி.மு.க., தலைவராக இருக்கும் டி.ஆர்.பாலுவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், சம்பவம் நடந்த அன்று அவர் சபைக்கு வரவில்லை. அவர் இருந்தால் நிச்சயம் ஏதாவது செய்திருப்பார் என்கின்றனர் சில தி.மு.க.,வினர்.
இன்னொரு பக்கம், இது தி.மு.க., - எம்.பி.,க்கள் இரண்டு கோஷ்டிகளாக செயல்படுவதால் வந்த பிரச்னை என்கின்றனர் விஷயம் தெரிந்தவர்கள. ஒரு கோஷ்டி, மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு தமிழகத்திற்கு அதிக வளர்ச்சி திட்டங்களை கொண்டு வர வேண்டும் என விரும்புகிறது. இன்னொரு கோஷ்டி மத்திய அரசை கடுமையாக விமர்சிக்க வேண்டும் என்கிறதாம்.
என்னத்த பதில் கொடுக்கறது இதை விட்டா விலய ஏத்தி மக்களை சுரண்டி ஆனா மத்தியஅரசு ஜி எஸ் டீ போட்டாங்கன்னு சொல்ல முடியுமா நாம வூர் ஜனங்க நம்பிடுவாங்க அது பார்லிமென்ட் ஆச்சே யாராவது எடக்கு மடக்கா மறுபடியும் ஏதாவது சொன்னா இன்னும் நம்ம சாயம் சுத்தமா வெளுத்துடும் அதனாலதான் இப்படி பண்ணினாங்க