அம்மன் கழுத்தில் 10 சவரன் திருட்டு
சென்னை:சென்னை, வியாசர்பாடி, எஸ்.ஏ.காலனியை சேர்ந்தவர் ராஜம்மாள், 38. இவர், அங்குள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலை நிர்வகித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை, கோவிலுக்கு வந்தபோது, கதவு திறந்து கிடந்து இருந்தது.
அம்மன் கழுத்தில் கிடந்த,10 சவரன் தாலி திருடு போயிருந்தது.இதுகுறித்து எம்.கே.பி.நகர் போலீசில் புகார் அளித்தார். வியாசர்பாடி, எஸ்.ஏ.காலனியில் நேற்று ரோந்து பணியில் இருந்த போலீசார், அம்பத்தூர், கள்ளிக்குப்பம், கங்கை நகரை சேர்ந்த விக்னேஸ்வரன், 23, என்பவர் சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்ததை பார்த்தனர்.
அவரிடம், 10 சவரன் தாலி இருந்தது தெரியவந்தது. அவரிடம் விசாரித்ததில், அம்மன் கழுத்தில் இருந்து அந்த தாலியை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
வாசகர் கருத்து (2)
அம்மன் சொல்லிச்சு: விக்னேசு, செயின் புல்லிங் வேணாம், பக்தைக்கு களுத்திலே காயம்படும். பாவிப் பயலுக லஞ்சப்பணத்திலே இந்த 10 பவுன் வாங்கி ஏங் களுத்துலே போட்டு, தெனசரி 100 பவுன் கேடைக்க வளி சொல்லுங்காங்க. நீயிம் ஏம் மவன்தானே. எடுத்துகிடுன்னாங்களா, தூக்க கலக்கத்திலே எடுத்துகிட்டேன். உருக்கி விக்கலையே அது தப்பாங்க சட்சு ஐயா?
ஆய்வு ஆட்சியில் அலங்கோலம் அமையப் போகு ம் தீபம் சுடர்விடும்